For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம்.. ராணி எலிசபெத் அதிரடி அனுமதி

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14ம் தேதி வரை முடக்கி வைக்க இங்கிலாந்து ராணி எலிசெபத் அனுமதி அளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில், நாடாளுமன்றத்தை முடக்க, பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்திருந்தார். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து அக்டோபர் 14 வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் பிரதமரின் உத்தரவுக்கு ராணி ஒப்புதல் அளித்தார் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Queen Elizabeth II approves Boris Johnson’s request to suspend Parliament

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. எனவே 'பிரெக்சிட்' மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். பிரெக்சிட் விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் அரசுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுவரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ஒப்புதல் அளிக்க கோரி ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வரும் அக். 14ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க, ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரதமரின் முடிவுக்கு பல எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Queen Elizabeth II approved a request by Prime Minister Boris Johnson on Wednesday to shut down Parliament for several weeks ahead of Britain’s upcoming departure from the European Union.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X