வெடித்து சிதறும் ஏவுகணைகள்.. குடும்பத்தோடு இஸ்ரேலில் சிக்கிய ராஜ்யசபா எம்பி! யார் இவர்-ஏன் போனார்?
இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. இருநாட்டு வீரர்களும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி ஒருவர் தனது குடும்பத்துடன் இஸ்ரேலில் சிக்கி உள்ளார். அவர் யார்? எதற்காக இஸ்ரேல் சென்றார்? தற்போது அவரது நிலைமை என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், இஸ்ரேலும் ஏவுகணைகள் மூலம் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக உள்ள கசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இதனை மீட்க இஸ்ரேல் முயற்சிப்பது தான் இந்த மோதலுக்கு காரணமாகும். இந்நிலையில் தான் நேற்று அதிகாலையில் திடீரென்று 5 ஆயிரம் ஏவுகணைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர்.
மேலும் அவர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாராசூட்டுகள் மூலமாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து போர் தொடங்கி விட்டதாக கூறி இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இன்று 2வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இன்றைய தினம் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. அதேபோல் ஹமாஸ் தீவிரவாதிகளும் தாக்குதலில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்நிலையில் போர் தான் போர் மேகம் சூழ்ந்த இஸ்ரேலில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இஸ்ரேலை பொறுத்தமட்டில் இந்தியாவை சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பராமரிப்பு பணி, ஐடி பணிகளுக்காகவும், கல்லூரி படிப்புகளுக்காகவும் சென்றவர்கள். இந்நிலையில் தான் இந்தியர்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் உதவி தேவைப்படுவோர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சூதரகங்களை தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இஸ்ரேலில் இந்தியாவை சேர்ந்த ராஜ்யசபா எம்பியான டாக்டர் வான்வீரோய் கர்லுகி அங்கு சிக்கி உள்ளார். மேகலாயாவில் ஆளும் என்பிபி எனும் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த இவர் தனது மனைவி, மகள் உள்ளிட்டோருடன் இஸ்ரேலில் உள்ளார். இவர் உள்பட மேகலாயாவை சேர்ந்த 24 பேர் புனித யாத்திரைக்காக ஜெருசலேம் சென்றனர். இத்தகைய சூழலில் போர் தொடங்கியதால் அவர்கள் தற்போது பெத்லகேமில் பதுங்கி உள்ளனர்.
இதுபற்றி மேகாலயா முதல்வரும், என்பிபி கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா கூறுகையில், ‛‛மேகலாவையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பும் நடவடிக்கைக்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருக்கிறேன்'' என்றார். இஸ்ரேலை பொறுத்தமட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் யூதர்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் 1950 மற்றும் 1960 காலக்கட்டத்தில் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றவர்களாவார்கள். தற்போதும் கூட மிசோராம், மணிப்பூரில் இருந்து இஸ்ரேலுக்கு ஏராளமானவர்கள் செல்வது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications