For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர விரும்பும் அலாஸ்கா மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

அலாஸ்கா: கிரிமியாவை தங்களுடன் ரஷ்யா சேர்த்துக் கொண்டது போன்று தங்களையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அலாஸ்கா மக்கள் விரும்புகின்றனர்.

Residents in Alaska want to join Russia

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்துவிட்டது. இந்நிலையில் யாரோ ஒருவர் வெள்ளை மாளிகை இணையதளத்தில் அலாஸ்காவை அமெரிக்காவிடம் இருந்து பிரித்து ரஷ்யாவுடன் சேர்க்க வேண்டும் என்று கூறி இதற்கு எத்தனை பேர் உடன்படுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து அமெரிக்காவில் இருக்கும் அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவுடன் இணைக்க இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இணையதளத்தில் உள்ள அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த அலாஸ்காவை அமெரிக்கா கடந்த 1867ம் ஆண்டு வெறும் 7.2 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குள் 1 லட்சம் பேர் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்வாகக் குழுவால் ஆய்வு செய்யப்பட்ட உள்ளது.

English summary
Residents of Alaska in the US want their state to be annexed with Russia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X