For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்ஸில் ஒரு குடும்பத்தாரை பிணையக்கைதிகளாக பிடித்தவர்களில் ஒருவர் சுட்டுக் கொலை, மற்றொருவர் கைது

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்சின் ரூபெக்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்தவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தவர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர், மற்றொருவரை கைது செய்தனர்.

பிரான்சில் பெல்ஜியம் எல்லையையொட்டி உள்ள ரூபெக்ஸ் நகரில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் கொள்ளையர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு புகுந்தனர். ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் வீட்டில் இருந்தவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டினர்.

Roubaix: Hostages rescued as France police kill one, held one suspect

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் வீட்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர், மற்றொருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மேலும் சில கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரூபெக்ஸ் நகரில் நடந்தது திட்டமிட்ட கொள்ளை முயற்சி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

இது குறித்து சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,

3 முறை துப்பாக்கி சுடம் சப்தம் கேட்டது. உடனே நான் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டேன். இரவுப் பொழுதை பதுங்கி கழிக்க தயார் ஆனேன் என்றார்.

English summary
France police arrested one hostage taker and killed another after a hostage situation in the town of Roubaix on tuesday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X