உக்ரைனில் கீவ்,சுமி உள்ளிட்ட 4 நகரங்களில் போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் 4 நகரங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மாஸ்கோ: உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமாக போர் நடத்தி வருகிறது. போரை நிறுத்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவின. இந்நிலையில், கடந்த 12 நாட்களாக உக்ரைனில் கடுமையான தாக்குதலை நடத்திவந்த ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. எனினும் பல நகரங்களில் விடிய விடிய குண்டு மழை பொழிந்து தாக்கி வருகிறது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மாணவர்களை மீட்கும் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று பேச உள்ளதாக தகவல் வெளியான நிலையில்
பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப்பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளது. இன்று முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 12 நாட்கள் நடைபெற்ற போரினால் இதுவரை 1.45 மில்லியன் மக்கள், உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இடப்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி, 7,87,300 அகதிகள் போலந்துக்கும், 228,700 பேர் மால்டோவாவிற்கும், 144,700 பேர் ஹங்கேரிக்கும், 132,600 பேர் ருமேனியாவிற்கும் 100,500 பேர் ஸ்லோவாக்கியாவிற்கும் சென்றுள்ளனர். உக்ரைனில் குறைந்தது 351 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 707 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன
இந்த சூழ்நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி டேவிட் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications