கடும் கட்டுப்பாடு..சர்க்கைரைக்கு கூட சண்டையிட்டுக் கொள்ளும் ரஷ்ய மக்கள்.. இணையத்தில் வைரல் வீடியோ..!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ : உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் உணவு தட்டுப்பாடு அபாயத்தால் அங்கு உணவு பொருட்கள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சர்க்கரைக்காக அந்நாட்டு மக்கள் சண்டையிட்டுக் கொள்ளூம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 25 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாட்டு மக்களும் கடும் துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

தாக்குதலை நிறுத்த கோரி பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலமுனை தாக்குதலை தொடங்கி உள்ளன.

பொருளாதாரத் தடைகள்

பொருளாதாரத் தடைகள்

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தி உள்ளன. இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல அந்நாட்டின் பங்கு சந்தைகளும் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டன. ஏற்கனவே கடும் விலைவாசி பிரச்சினையில் சிக்கித் தவித்து வரும் ரஷ்யாவில் பணமதிப்பு வீழ்ச்சி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது.

உணவு பொருட்களுக்கு கட்டுப்பாடு

உணவு பொருட்களுக்கு கட்டுப்பாடு

ரஷ்ய விமானங்கள் போக்குவரத்தையும் அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்ற நாடுகள் தடை செய்துள்ள நிலையில் உணவு ஏற்றுமதி இறக்குமதி பெரும் சவாலாக உள்ளது. பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உணவுப் பொருட்களை கட்டுப்படுத்த உணவுப் பொருட்களின் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனை மற்றும் உணவுப் பொருட்களை வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவுக்கே விற்பனை

குறிப்பிட்ட அளவுக்கே விற்பனை


தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் வர்த்தக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதை தொழில் மற்றும் வர்த்தகம் விவசாயத்துறை அமைச்சகங்கள் ஆதரித்து உள்ளதாகவும் அரிசி, முட்டை, ரொட்டி , காய்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரைக்காக சண்டை

சர்க்கரைக்காக சண்டை

இந்நிலையில் சர்க்கரைக்காக சூப்பர் மார்க்கெட்டுகளில் ரஷ்ய மக்கள் சண்டை போடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உக்ரைனில் நடந்த போரின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக நாட்டில் உள்ள சில கடைகள் வாடிக்கையாளருக்கு 10 கிலோ தான் சர்க்கரை வழங்கப்படும் என்ற வரம்பை விதித்துள்ளன. 2015ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவில் வருடாந்திர பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியதன் மூலம் சர்க்கரை விலை உயர்ந்துள்ளன.தற்போது வெளிவந்துள்ள வீடியோக்களில், ஷாப்பிங் கார்ட்களில் இருந்து சர்க்கரைப் பைகளைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக சண்டையிட்டுக் கொள்வதையும், தத்தளிப்பதையும் காணலாம். இந்த வீடியோக்கள் ட்விட்டரில் ட்ரெண்டான நிலையில், ரஷ்ய-உக்ரைன் போரால் சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+