For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவலைப்படாதீங்க மக்களே.. ஓமிக்ரானுக்கு தடுப்பூசி ரெடி.. நம்பிக்கையளிக்கும் ரஷ்யா..!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ஓமிக்ரானுக்கு எதிராக தங்கள் நாட்டு தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசிக்கு எதிரான செயல் திறன், மிக வேகமாக பரவும் தன்மை காரணமாக உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது ஓமிக்ரான்.

தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங், ஆஸ்திரேலியா என ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கும் ஓமிக்ரான் பரவி விட்டது. இதனால் உலகநாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா தங்கள் நாட்டின் எல்லைகளை திறக்கும் முடிவை தள்ளிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்! இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்!

தடுப்பூசி சக்தி

தடுப்பூசி சக்தி

புதிய வகை கொரோனா திரிபான ஓமிக்ரான், ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களையும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களையும் கூட தாக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், அந்த வைரஸின் புகைப்படம் மற்றும் அதனை எதிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யா நம்பிக்கை

ரஷ்யா நம்பிக்கை

இந்தநிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ஊசியான ஸ்புட்னிக் வி, மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என ரஷ்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளது உலக நாடுகளிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது..

ஸ்புட்னிக் தடுப்பூசி

ஸ்புட்னிக் தடுப்பூசி

உலகிலேயே முதன் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் v ஆகும். கோவாக்சின் கோவிஷீல்டு போலவே ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் 2 டோஸ்களை கொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரஷ்யாவில் இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக அதிக செயல்திறன் கொண்டதாக ஸ்புட்னிக் தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸில் எத்தகைய மாறுதல்கள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசிகள் என்றும் , தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகளையும் தயாரிக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது..

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil
    ஓமிக்ரானையும் தடுக்கும்

    ஓமிக்ரானையும் தடுக்கும்

    உலக நாடுகளை அச்சத்தில் அடுத்துள்ள ஓமிக்ரோன் வைரஸுக்கு எதிராக தடுப்புஊசிகளை உடனடியாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வகை தடுப்பூசிகளை 45 நாட்களுக்குள் பெருமளவில் தயார் செய்ய முடியும் என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் மற்ற திரிபுகளுக்கு எதிராக மிக உயர்ந்த செயல் திறனை கொண்டிருப்பதால், இது ஓமிக்ரானையும் தடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    English summary
    Russian health officials say Russia's coronavirus vaccine, Sputnik V, and the Sputnik Lite vaccine will build immunity against Omigran, sowing new hope in the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X