ரஷ்யாவில் டெல்டா வைரஸால் திடீர் ஸ்பைக்.. தொடர்ந்து 5-வது நாளாக பலி எண்ணிக்கை அதிகரிப்பு
மாஸ்கோ: ரஷ்யாவில் டெல்டா வைரஸால் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 697 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்த பாதிப்பு எண்ணிக்கையாகும்
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் அதன் தலைநகர் மாஸ்கோ தான் டெல்டா வைரஸ் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்பூசிகளைக் செலுத்திக் கொள்ள பலரும் தயக்கம் காட்டியது தான் டெல்டா வைரஸ் பரவ காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது ரஷ்யாவில் மொத்தம் உள்ள 14.6 கோடி மக்களில் 16 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி இந்தியா உள்பட 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதனிடையே ரஷ்ய அதிபர் புதின், தடுப்பூசிகளை கட்டாயமாக்க முடியாது என்று மறுத்துள்ளார் .ஆகஸ்ட் மாதத்திற்குள் 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை இழக்க நேரிடும் என்று ஒப்புக் கொண்ட அதிபர், நாடு தழுவிய லாக்டவுனும் போட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications