கீவ்வை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யா.. ஏவுகணையால் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்! பதைபதைப்பு!
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் குடியிருப்பு கட்டடம் ஒன்றை ரஷ்யா ஏவுகணையை வைத்து தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.
உக்ரைன் நேட்டோவில் இணைய முயற்சித்து வருவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்தது. இதனால் எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா போரிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைனில் ரஷ்யா போரிட தொடங்கியது. வான்வழியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில் ரஷ்ய துருப்புகள் நகரங்களில் நுழையத் தொடங்கினர்.

உக்ரைன்
இதனால் உக்ரைனின் கிழக்கு, தெற்கு, வடக்கு பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பதுங்குகுழி, மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.

கீவ் நகரை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யா
இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டைய நாடுகளுக்கு சென்றுவிட்டனர். கீவ் நகரை இன்று இரவுக்குள் கைப்பற்ற துடிக்கும் ரஷ்யா பயங்கர தாக்குதல்களை நடத்திக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்ய படைகள் கீவ் தலைநகரை நெருங்கி சுற்றி வளைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஆட்சி அதிகாரம்
இதனிடையே உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார். நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்கும் என உருக்கமாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். அது போல் இன்றைய தினம் வெளியிட்டுள்ள வீடியோவில் இன்று இரவுக்குள் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்யா துடிக்கிறது.

கீவ் கதி என்ன
இன்று இரவுக்குள் கீவ் என்ன கதியாகும் என தெரியவில்லை. நிறைய நாடுகள் எங்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறார்கள். ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை ஆயுதங்களை நாங்கள் கீழே போட மாட்டோம். சரணடையவும் மாட்டோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அடுக்குமாடி குடியிருப்புகள் மீது தாக்குதல்
இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் தகர்த்தெறியப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த கட்டடத்திற்குள் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்துவிட்டதால் யாரும் உயிரிழக்கவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications