உக்ரைன் அணு உலைகளை வரிசையாகக் கைப்பற்றும் ரஷ்ய ராணுவம்! புதின் திட்டம் தான் என்ன? பரபர தகவல்
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், அந்நாட்டின் மிகப் பெரிய அணு உலை தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து பீரங்கி மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையிலும் பெரியளவில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இதனிடையே தற்போது உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் இப்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளது

உக்ரைன் கட்டுப்பாட்டில்
இதனால் அங்குப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள டினீப்பர் ஆற்றின் அருகே உள்ள சபோரிஜியா நகரில் அமைந்துள்ள உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும், அணுமின் நிலையத்தில் தற்போது வரை வழக்கமான பணிகளே நடைபெற்று வருவதாக ரஷ்யாவின் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கருத்தைத் தான் உக்ரைன் நாட்டின் அணுசக்தி ஆபரேட்டரும் தெரிவித்துள்ளது.

6 அணுஉலைகள்
உக்ரைன் நாட்டில் மொத்தம் 15 அணுசக்தி உலைகள் உள்ள நிலையில், அதில் ஆறு உலைகளை இந்த ஜபோரிஜியா ஆலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அணுஉலை அமைந்துள்ள சபோரிஜியா நகரில் ரஷ்ய ராணுவம் நுழைய விடாமல் அங்குள்ள பொதுமக்கள் சாலைகளை மறித்தாக தகவல் வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செர்னோபில் அணுமின் நிலையம்
செர்னோபில் அணுமின் நிலையம் பழைய தொழில்நுட்பத்தைக் கொண்டது என்பதால், அது பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு நடத்த வேண்டும் என உக்ரைன் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய அணு ஆயுத நிலையங்களை ரஷ்யா வரிசையாகக் கைப்பற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் போர்
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர் தாக்குதல் சற்றே குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால், ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications