For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களை ரஷ்யா அறுத்துவிடுமோ?: கவலையில் அமெரிக்கா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கடலுக்கு அடியில் உள்ள தொலைத்தொடர்பு கேபிள்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் உளவு கப்பல்கள் செல்வது அமெரிக்காவுக்கு கவலை அளித்துள்ளது.

ரஷ்யா தனது கடற்படை நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. கடலுக்கு அடியில் தொலைத்தொடர்பு கேபிள்கள் உள்ள பகுதிகளில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் உளவு கப்பல்கள் நடமாட்டம் இருப்பது அமெரிக்காவுக்கு கவலை அளித்துள்ளது.

Russian Presence Near Undersea Cables Concerns U.S.

ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் உளவு கப்பல்கள் கடலுக்கு அடியில் உள்ள பைபர் ஆப்டிக் தொலைத்தொடர்பு கேபிள்களை அறுக்கும் தன்மை கொண்டவை. அந்த கேபிள்கள் அறுக்கப்பட்டால் மேற்கத்திய நாடுகளின் அரசுகள், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படும்.

இந்நிலையில் ரஷ்யாவின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது. பென்டகன் மற்றும் அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்களில் ரஷ்யாவின் கடற்படை நடவடிக்கை அதிகரித்து வருவது பற்றி தான் ஆலோசிக்கிறார்கள். ரஷ்யா கேபிளை அறுத்துவிட்டால் என்ன செய்வது என்று ஆலோசிக்கப்படுகிறது.

கண்டுபிடிக்க முடியாத ஆழத்தில் கேபிளை ரஷ்யா அறுத்துவிட்டால் என்ன செய்வது என்பது தான் அமெரிக்காவின் பெரிய கவலை. பென்டகனில் இது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தாலும் வெளிப்படையாக அது பற்றி தெரிவிக்காமல் உள்ளனர்.

கடந்த மாதம் ரஷ்ய உளவு கப்பலான யந்தர் அமெரிக்கா வழியாக க்யூபா சென்றது. அந்த கப்பல் சென்ற வழியில் கடலுக்கு அடியில் முக்கிய கேபிள் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள கேபிகளை அறுக்கும் திறன் யந்தருக்கு உள்ளது என்று அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலுக்கு அடியில் சிறிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஆளில்லா விமானத்தை ரஷ்யா தயாரித்து வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Russia's increasing naval activity especially near undersea cables is the major concern for the USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X