இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

சவுதியில் ஊழல் செய்த 200 பேர் கைது! - விரட்டி விரட்டி கைது செய்யும் இளவரசர்

By Mayura Akilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   சவுதியில் விரட்டி விரட்டி கைது செய்யும் இளவரசர்- வீடியோ

   சவுதியில் மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் 200 பேர் வரை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

   சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் அண்மையில் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   சவுதியில் அரச குடும்பத்தில் உள்ள பலர் ஊழலில் ஈடுபட்டு வருவதாக சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
   இதைத் தொடர்ந்து சவுதியில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் முகம்மது பின் சல்மான் இறங்கிவிட்டார். அதன் தொடக்கமாக இவர் தலைமையில் சமீபத்தில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

   12 பேர் சிறையில் அடைப்பு

   12 பேர் சிறையில் அடைப்பு

   ஊழல் ஒழிப்புக் குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். மூன்று அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் என 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதியின் பெரும் பணக்காரர் ஆன அல் வலீத் பின் தலாலும் இளவரசர் குறியில் இருந்து தப்பவில்லை.

   1,700 வங்கிக் கணக்குகள்

   1,700 வங்கிக் கணக்குகள்

   இதையடுத்து வியாழக்கிழமை மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழல் செய்திருக்கலாம் என்று விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1,700 வங்கிக் கணக்குகளின் மீது ஊழல் தடுப்புக் குழு சந்தேகம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

   அட்டர்னி ஜெனரல் சவுத் அல் மொஜப்

   அட்டர்னி ஜெனரல் சவுத் அல் மொஜப்

   இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஊழல் தடுப்பு கமிஷனில் ஒருவரான சவுதியின் அட்டர்னி ஜெனரல் சவுத் அல் மொஜப் , ஊழல் வழக்குகள் தொடர்பாக இதுவரையில் விசாரணைக்காக 208 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 200 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

   கடும் நடவடிக்கை

   கடும் நடவடிக்கை

   மக்களுக்கான நிதி ஊழல் என்ற பெயரில் திருடப்படுகிறது. ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பதவி பறிக்கப்படும், சொத்துக்கள் முடக்கப்படும். ஊழல் குற்றங்களால் சவுதியின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்று சவுதி அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

   English summary
   More than 200 people have been summoned for questioning, and most are still detained, in a wide-ranging crackdown that Saudi Arabia says is aimed at rooting out corruption and reclaiming embezzled funds, the government said.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more