சவூதி வாழ் தமிழர்கள் ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு 13,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை
சவூதி வாழ் தமிழர்கள் ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு 13,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
ரியாத் : ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக சவூதி வாழ் தமிழர்கள் 13,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளும் நன்கொடை அளித்து வருகிறது. அச்சீரிய முயற்சி முடிவடையும் தருவாயில் உள்ளது.

ஹார்வேர்ட் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரியாத்வாழ் தமிழர்களின் சிறு பங்களிப்பை அளிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு முன் ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் 5000ம் அமெரிக்க டாலர்களை வழங்கியது, பின்னர் ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் கடந்த 19-01-2018 அன்று மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா நடத்தி நிதி திரட்டியது.

அந்த விழாவில் ரியாத் வாழ் தமிழர்கள் 5000 அமெரிக்க டாலர்கள் உதவினார்கள், இப்படியாக மொத்தம் ரியாத்வாழ் தமிழர்கள் சார்பாக இதுவரை 10,000 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் நீட்ச்சியாக தமாம் பகுதியில் வாழும் தமிழர்கள் தமிழ்நாடு சமூகநல அமைப்பு சார்பாக 3000 அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டியுள்ளார்கள், இவ்வாறு சவூதி அரேபியா தமிழர்கள் ஒன்றினைந்து ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்காக மொத்தம் 13,000 அமெரிக்க டாலர்கள் வழங்கியுள்ளார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications