For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித ஆன்மா சம்பந்தப்பட்ட புத்தகத்திற்கு பெண்ணின் தோலால் மேல் அட்டை... அதிகாரிகள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

நியூ யார்க்: அமெரிக்க நூலகமொன்றில் மனித ஆன்மா குறித்த புத்தகம் ஒன்றிற்கு அட்டையாக இறந்த பெண் ஒருவரின் தோல் பயன் படுத்தப் பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ளது ஹார்வார்ட் நூலகம்.இங்குள்ள சில புத்தகங்களின் அட்டை வித்தியாசமான தோல் போன்ற பொருட்களால் பைண்டிங் செய்யப் பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவை எதனால் ஆனவை என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். அதன்படி, அங்கிருந்த 3 புத்தகங்களின் மேல் அட்டை தோலினால் ஆனது என்று சந்தேகித்த அதிகரிகள் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பினர்.

மனித தோல்...

மனித தோல்...

பரிசோதனையின் முடிவில், அவற்றில் இரண்டு புத்தகங்கள் ஆட்டுத் தோலினாலும், ஒரு புத்தகம் மனிதத் தோல் குறிப்பாக பெண்ணின் தோலினாலும் ‘பைண்டிங்' செய்யப்பட்டுள்ளது என்ற திடுக்கிடும் உண்மை தெரிய வந்துள்ளதாம்.

ஆராய்ச்சிக் கட்டுரைப் புத்தகம்...

ஆராய்ச்சிக் கட்டுரைப் புத்தகம்...

மனித தோலால் மேல் அட்டை போடப்பட்டுள்ள புத்தகம் மனித ஆன்மாவை வசப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதனை ஒரு பிரெஞ்சு நாவலாசிரியர் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார்.

மனநோயாளிப் பெண்...

மனநோயாளிப் பெண்...

அந்த புத்தகத்தின் அட்டைக்கு மேலுறையாக மாரடைப்பால் மரணம் அடைந்த அடையாளம் தெரியாத ஒரு மனநோயாளி பெண்ணின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது..

மனித ஆன்மா குறித்த புத்தகம்...

மனித ஆன்மா குறித்த புத்தகம்...

அந்த தோலின் ரோமக் கால்களை மிக துல்லியமாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஒரு வேளை இந்த புத்தகம் மனித ஆன்மா சம்பந்தப்பட்டது என்பதற்காக மேல் அட்டையாக மனிதத் தோலை பயன்படுத்தி இருபார்களோ..?' எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

English summary
A new study has reveal that a copy of Arsène Houssaye's Des destinées de l'ame held in the Houghton Library at Harvard is "without a doubt bound in human skin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X