For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சக்கட்ட பரபரப்பு.. உக்ரைன்- ரஷ்யா 2வது கட்ட பேச்சுவார்த்தை.. துருக்கியில் இன்று நடைபெறுகிறது

உக்ரைன், ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இன்று துருக்கியில் தொடங்குகிறது

Google Oneindia Tamil News

துருக்கி: உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று துருக்கியில் தொடங்குகிறது... அதன்படி இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது.. பல நாட்டு தலைவர்கள் சொல்லியும் போரை ரஷ்யா நிறுத்தவில்லை..

இந்த கொடூர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.. ஏராளமான அப்பாவி மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி கொண்டிருக்கிறார்கள்..

பாரத் பந்த்: மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுதும் வேலைநிறுத்தம் தொடங்கியது.. வங்கிசேவை பாதிப்புபாரத் பந்த்: மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுதும் வேலைநிறுத்தம் தொடங்கியது.. வங்கிசேவை பாதிப்பு

 பொதுமக்கள் பீதி

பொதுமக்கள் பீதி

தியேட்டர்கள், ரெயில்வே சுரங்க பாதை, பதுங்கு குழிகள் என எங்கெல்லாம் ஓடி ஒளிந்து கொள்ள முடியுமோ அங்கே தஞ்சம் அடைந்துள்ளனர்... எனினும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.. இன்னமும் போர் நீடித்து வருகிறது... இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஏராளமானோர்.. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறியும் வருகின்றனர்.

தோல்வி

தோல்வி

இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.. போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.. அந்த மூன்றுமே தோல்வியில் முடிந்தது.. இதனிடையே, துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்..

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

துருக்கியில் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று ஏற்கனவே உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே மறுபடியும் துருக்கியில் 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.. இந்த தகவலை உக்ரைன் டேவிட் அரகாமியா ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தைகள் எல்லாமே மிகவும் கடினமானவை என்று உக்ரைன் விமர்சித்து கொண்டிருந்தது.. எனினும் இன்று துருக்கியில் நடத்தப்போகும் பேச்சுவார்த்தையிலாவது திருப்பம் வருமா என்ற எதிர்பார்ப்பு உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த சுற்று பேச்சுவார்த்தை, துருக்கியில் இன்று தொடங்கி, நாளை மறுதினம் அதாவது புதன்கிழமை முடிவடைகிறது.

டிவி மூலம் உரை

டிவி மூலம் உரை

முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் டிவி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், "இந்த வாரம் துருக்கியில் நடக்கும் உக்ரைனிய-ரஷ்ய பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகும்... தாமதமின்றி அமைதி வேண்டும் என்பதை தான் நாங்கள் நிஜமாகவே எதிர்பார்க்கிறோம்.. அதேபோல, துருக்கியில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பும் தேவையும் இன்று ஏற்பட்டுள்ளது..

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இது மோசமானதல்ல.. முடிவு எப்படி என்பதைதான் பார்க்க வேண்டி உள்ளது.. ரஷ்யா முற்றுகையிட்ட மரியுபோல் நகரங்களின் மோசமான நிலைமையை நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன்... உக்ரைனின் ஆயுதப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்தி வந்தாலும், சில பகுதிகளில் முன்னேறியும் வருவதால், அவர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்" என்றார்.

English summary
Second round of ukraine russia talks to take place in turkey today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X