சாலையில் சென்ற கார்.. குறி பார்த்து வந்த குண்டு.. உடல் சிதறிய தம்பதி! ரஷ்ய தாக்குதலின் கோர காட்சி

Subscribe to Oneindia Tamil

கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சாலையில் சென்று கார் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில் காரில் பயணம் செய்த வயதான தம்பதியினர் காருக்குள்ளேயே பலியாகிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களை குறிவைத்து பலமுனை தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என்பதால் பதட்டம் நீடிக்கிறது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

நேட்டோ உள்ளிட்ட உலகின் முக்கிய அமைப்புகள் கைவிட்ட நிலையில் தனியாக நின்று ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது உக்ரைன். ரஷ்யாவே எதிர்பாராதவிதமாக உக்ரைன் நடத்திய பதிலடி தாக்குதலில் 9 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போர் காரணமாக அந்நாட்டில் வசிக்கும் மக்கள் கால்நடையாக அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

எதிர் தாக்குதல்

எதிர் தாக்குதல்

ரஷ்யா ராணுவத்தின் தாக்குதல் காரணமாக முதல்நாள் போரிலேயே உக்ரைன் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் இதுவரை லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் . அதே நேரத்தில் ரஷ்யாவின் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களையும் உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார தடை

பொருளாதார தடை

உலக நாடுகள் கைவிட்டுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கடைசிவரை போராடும் எனவும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக உலக நாடுகள் நேரடியாக போராடாத நிலையில் ஆயுதங்கள் வழங்கி, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.

நீடிக்கும் பேச்சுவார்த்தை

நீடிக்கும் பேச்சுவார்த்தை

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதனை ரஷ்யா மறுத்துள்ளது. ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஆயுதங்களை கைவிட்டு வந்தால் மட்டுமே உக்ரைன் நாட்டிற்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Recommended Video

    Russia கெடுபிடி! Ukraine இதுக்கு OK சொன்னால் போரை நிறுத்துவோம்! | Oneindia Tamil
    அதிர்ச்சி காட்சிகள்

    அதிர்ச்சி காட்சிகள்

    இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சாலையில் சென்று கார் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில் காரில் பயணம் செய்த வயதான தம்பதியினர் காருக்குள்ளேயே பலியாகிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காருக்குள்ளேயே வயதான் தம்பதியினர் சடலமாக இருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் அதனை பகிர்ந்து ரஷ்யாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+