For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் சோலார் நகரம்.. கலிபோர்னியாவில் அனைத்து வீடுகளுக்கும் சோலார் கட்டாயம்!

கலிபோர்னியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்று கட்டாய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்று கட்டாய சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க தற்போது மாசுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. முக்கியமாக மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் முறைகளால் மாசுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் சோலார் பவர் மூலம் மின்சாரம் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதற்படியாக கலிபோர்னியாவில் சோலார் திட்டம் பெரிய அளவில் அமல்படுத்தப்பட உள்ளது.

கட்டாயம்

கட்டாயம்

இந்த திட்டத்தின் படி இனி கலிபோர்னியாவில் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் கட்டாயமாக சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்டுதான் கட்டப்பட வேண்டும். அதன்படி வீடு கட்ட அனுமதி வாங்கும் போது, சோலார் பேனல்கள் எப்படி பொருத்தப்படும் என்று கட்டிடத்தின் வடிவமைப்பை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே இந்த புதிய வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும்

அனைத்து வீடுகளுக்கும்

அதேபோல் இந்த திட்டம் 2020க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது. 2020 வரை சோலார் பேனல்கள் இல்லாத வீடுகள் கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி அந்த வீடுகள் மொத்தமாக கணக்கெடுக்கப்பட்டு அதில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளது. உலகிலேயே எல்லா வீடுகளுக்கும் சோலார் பேனல்களை கட்டாயமாக்கிய பகுதி இனி கலிபோர்னியாவாக மட்டுமே இருக்கும்.

அதிக செலவு

அதிக செலவு

ஒரு நபர் வசிக்க கூடிய சிறிய வீடாக இருந்தாலும் அதில் சோலார் பேனல்கள் வைக்க வேண்டும். வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்கு தகுந்தார் போல சோலார் பேனல்கள் வைக்க வேண்டும் என்று அம்மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு 1 லட்சம் வரை அதிகம் செலவாகும். ஆனால் எதிர்கால மின்சார தேவைகளை பார்க்கும் போது இந்த செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெரிய சாதனை

பெரிய சாதனை

தற்போது 2020 வரை இவர்கள் இலக்கு நிர்ணயித்து வேலை பார்க்கிறார்கள். எல்லா வீடுகளுக்கும் 2025க்குள் எப்படியும் சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்டுவிடும் என்று மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இப்போது அந்த மாகாணத்தில் 16 சதவிகித மின்சார தேவையை சோலார் மின்சாரம்தான் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டம் சரியாக கடைபிடிக்கப்பட்டால், 95 சதவிகித மின்சார தேவையை கண்டிப்பாக இந்த சோலார் திட்டம் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

English summary
Solar Panels now become mandatory for houses in California. They wanted to achieve new solar state with thei law. California is the first place to make solar panel compulsory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X