அட.. டிரம்ப் கிட்ட சட்டை பட்டனை தவிர வேற எந்த பொத்தானும் கிடையாதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன்னிடம் உள்ள அணு ஆயுத பட்டனை விட பெரிய பட்டன் என்னிடம் இருக்கு. அழுத்தினேன், வட கொரியா காலியாகி விடும் என்று கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் உண்மையில் அப்படி எந்த பட்டனும் டிரம்ப்பிடம் கிடையாது என்பதே உண்மை.

ச்சும்மா லுலுலாய்க்காக அப்படிக் கூறியுள்ளார் டிரம்ப். அப்படிப்பட்ட பட்டன் டிரம்ப்பிடம் மட்டுமல்ல, வேறு எங்குமே இல்லை என்பதே உண்மை. அறிவியல் தெரிந்தவர்களுக்கு இது புரியும். அணு ஆயுதங்களை பட்டனை அழுத்தியெல்லாம் வெடிக்க வைக்க முடியாது.

புத்தாண்டின்போது பேசிய கிம், என்னிடம் அணு ஆயுதப் பட்டன் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். அமெரிக்காவை தாக்க எங்களது அணு ஆயுதங்கள் தயாராக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், அவரிடம் உள்ளதை விட பெரிய பட்டன் என்னிடம் இருக்கு. அழுத்தினால், வட கொரியா காணாமல் போய் விடும் என்று மிரட்டியிருந்தார்.

நோ பட்டன் பாஸ்!

நோ பட்டன் பாஸ்!

ஆனால் உண்மையில் டிரம்ப்பிடம் அப்படி எந்த பட்டனும் கிடையாதாம். சட்டை நிறைய பொத்தான்தான் இருக்கும்!. ஒரு அணு ஆயுதத்தை இயக்க வேண்டுமானால் அதில் பலருடைய பங்களிப்பு தேவைப்படும். ஒரே ஒரு பட்டனை அழுத்தி எந்த குண்டையும் வெடிக்க வைக்க முடியாது.

ராணுவக் குழுதான் செய்யும்

ராணுவக் குழுதான் செய்யும்

அணு ஆயுதத்தை இயக்கும் பொறுப்பு டிரம்ப்பை விட முக்கிய ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவிடம்தான் உள்ளது. இந்தக் குழுவை நியமிக்கும் உரிமை டிரம்ப்புக்கு உண்டு. அவர் தனக்கு நம்பகமான அதிகாரிகளைத் தேர்வு செய்து குழு அமைத்து அந்தக் குழுதான் அணு ஆயுதத்தை இயக்கும் பணியைச் செய்ய முடியும்.

டிரம்ப் கையில் பிஸ்கட்

டிரம்ப் கையில் பிஸ்கட்

இதற்கான உத்தரவை கோட் வடிவில் பென்டகன் வடிவமைத்து அதை ஒரு கார்டில் (சிம் கார்டு போல என்று வைத்துக் கொள்ளலாம்) பதிவு செய்து அதை அதிபரிடம் கொடுத்துள்ளது. பிஸ்கட் என்று இதை செல்லமாக அழைப்பார்கள்.

உத்தரவிட்டால் வெடிக்க வைப்பார்கள்

உத்தரவிட்டால் வெடிக்க வைப்பார்கள்

இந்த கார்டு எப்போதும் அதிபரிடம் இருக்கும். அவர் எங்கு போனாலும் இதை கையில் வைத்திருப்பார். தேவைப்படும் பட்சத்தில் இதைப் பயன்படுத்தி அவர் உரிய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிப்பார். அதன் பிறகுதான் அணு ஆயுத பயன்பாட்டுக்கான வேலைகள் ஆரம்பிக்கும். மற்றபடி பொத்தானை அழுத்தி பொட்டென்று போட்டுத் தள்ளும் வேலையெல்லாம் கிடையவே கிடையாதாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
US president Donald Trump has warned of ‘big nuclear button’ against the North Korea, but he doesn’t really have one.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற