ஜிம்மே வேணாம் பாஸ்.. 2 நாளில் 'சிக்ஸ் பேக்'.. தென்னாப்பிரிக்க இளைஞரின் மரணமாஸ் ஐடியா!
தென்னாப்பிரிக்காவில் இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைக்க முடியாததால், அதனை வயிற்றில் டாட்டூவாக வரைந்து ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார்.
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சிக்ஸ் பேக் வைக்க முடியாத சோம்பேறி இளைஞர் ஒருவர், வித்தியாசமாக சிந்தித்து இரண்டே நாளில் சிக்ஸ் பேக் வைத்த சம்பவம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் மிரள வைத்துள்ளது.
நடிகர்களைப் பார்த்து, தாங்களும் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்ற மோகம் உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் சிக்ஸ் பேக்கைப் பார்த்து, ஜிம்மே கதியெனக் கிடந்தவர்கள் நம்மூரில் அதிகம். தனுஷ், அதர்வா, அருண் விஜய், விஷ்ணு விஷால் என தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் ஹீரோக்கள் அதிகம். ஹீரோக்கள் மட்டுமல்ல காமெடி நடிகரான சூரி கூட ஒரு படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார்.
பார்ப்பதற்கு வேண்டுமானாலும் சுலபமாக தெரிந்தாலும், சிக்ஸ் பேக் வைப்பதெல்லாம் நிஜத்தில் லேசுபட்ட காரியம் அல்ல. மூன்று வேளையும் லெக் பீசோட பிரியாணி சாப்பிட்டவர்கள்கூட, வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சிக்ஸ் பேக் வைக்க கஷ்டப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக சிக்ஸ் பேக் வைப்பதற்கு தண்ணீர் குறைவாகக் குடிக்க வேண்டும். சமயங்களில் ஸ்பூன்களில்கூட மாஸ்டர்கள் தண்ணீர் தருவார்கள்.

மாற்றி யோசித்த இளைஞர்
ஆனால் சிக்ஸ் பேக் வைக்க இப்படியெல்லாம் கஷ்டப்பட முடியாது என, தென்னாப்பிரிக்காவில் இளைஞர் ஒருவர் குறுக்கு வழியில் மாஸாக ஐடியா செய்து, தனது தொந்தியும் தொப்பையுமான வயிற்றை சிக்ஸ் பேக்காக மாற்றி அசர வைத்துள்ளார். அதுவும் இரண்டே நாளில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அதெப்படி.. சாத்தியமேயில்லை என்கிறீர்களா.. அப்ப இதை முழுசா படிங்க.

டாட்டூ கலைஞர்
தென்னாப்பிரிக்காவின் மான்செஸ்டரில் வசிக்கும் டீன் கன்டர் என்பவர் பிரபலமான டாட்டூ கலைஞர். கலர்புல்லாக டேட்டூஸ் போடுவது இவரது சிறப்பம்சம். இதனாலேயே இவரிடம் பலர் ஆர்வமாக டாட்டூஸ் போட்டுக் கொள்கிறார்கள். சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்பட்ட நம் செய்தியின் நாயகனும் நேராக இவரிடம் தான் சென்றுள்ளார்.

சொந்தக் கதை.. சோகக் கதை
சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்ற ஆசை வந்த அடுத்த நாளே எல்லாம், இவர் கண்டரிம் சென்று விடவில்லை. பல ஆண்டுகள் ஜிம்முக்குப் போய் சிக்ஸ் பேக் வைக்க முயற்சித்தும், அது முடியாததால் தான் இந்த குறுக்கு வழியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். பல ஆண்டுகளாக முயற்சித்தும் தன்னால் சிக்ஸ் பேக் வைக்க முடியாத சோகக் கதையை அவர் கன்டரிடம் சொல்லியிருக்கிறார்.

டாட்டூவில் சிக்ஸ் பேக்
உடனே கன்டருக்கு செம யோசனை ஒன்று தோன்றியிருக்கிறது. இதையடுத்து அவர் அந்த மனிதரை தனது ஸ்டுடியோவுக்கு வரவழைத்து, இரண்டு நாட்கள் முயற்சித்து, அசல் சிக்ஸ் பேக் போன்று அவரது வயிற்றில் டாட்டூ போட்டு விட்டு விட்டார். கூடவே இதனை வீடியோவாகவும் பதிவு செய்து தனது சமூகவலைதளப் பக்கத்திலும் கன்டர் வெளியிட்டுள்ளார்.

வாயடைத்துப் போன நெட்டிசன்கள்
அந்த வீடியோவில், இளைஞரின் வயிற்றில் இருப்பது அசல் சிக்ஸ் பேக் என்றே எண்ணத் தோன்றுகிறது. டாட்டூ போடப்படுவதற்கு முந்தய வீடியோவைப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இப்படியும் சிக்ஸ் பேக் வைக்க முடியுமா? என ஆச்சரியத்தில் வாயடைத்து போயுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications