ஷூ விற்பனையில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையே அலற வைத்து எமிரேட்ஸில் சிக்கிய இந்திய குப்தா சகோதரர்கள்!
ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் இணைந்த் அந்நாட்டு கஜானாவையே சூறையாடிய இந்தியர்களான குப்தா சகோதரர்களில் 2 பேர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. அவரது பதவிக் காலத்தில் இந்திய தொழிலதிபர்களான குப்தா சகோதரர்கள் ஆடிய ஆட்டம் தென்னாப்பிரிக்காவையே அதிர வைத்தது. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய லஞ்சம் ஊழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொடி கட்டிப் பறந்தனர் குப்தா சகோதரர்கள்.

தென்னாப்பிரிக்கா வன்முறை
ஆனால் குப்தா சகோதரர்கள் போட்ட ஆட்டம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஒரு கட்டட்தில் ஊழல் வழக்குகளில் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் குப்தா சகோதரர்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது. தமிழர்கள் உட்பட இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

தப்பி ஓடிய குப்தாஸ்
இதனால் 2018-ம் ஆண்டு குப்தா சகோதரர்கள், தென்னாப்பிரிக்காவை விட்டு தப்பி ஓடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில், குப்தா சகோதரர்களில் இருவரான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் குப்தா சகோதரர்களின் ஒருவரான அஜய் குப்தா கைது செய்யப்பட்டாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
தென்னாப்பிரிக்கா அரசாங்கம் குப்தா சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதை மட்டும் உறுதி செய்துள்ளது.

குப்தாக்கள் வளர்ந்த கதை
1990களில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற குப்தா சகோதரர்கள் தங்களது கார்களில் ஷூக்களை வைத்து விற்பனை செய்யும் அளவுக்கு மிகவும் ஏழ்மை நிலைமையில்தான் இருந்தனர். தென்னாப்பிரிக்காவில் சஹாரா கம்ப்யூட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி அர்சியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து தென்னாப்பிரிக்க அரசாங்க பணத்தை கொள்ளையடிக்க தொடங்கினர் குப்தா சகோதர்கள். அதிபராக இருந்த ஜூமாவுடன் நெருக்கமாகும் அளவுக்கு இந்த கொள்ளை தொழில் நீட்சியடைந்தது.

ஊழல் வெறியாட்டம்
பின்னர் தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தை தீர்மானிக்கும் பணபேரங்களிலும் குப்தா சகோதரர்கள் இறங்கினர். இதனால் குப்தா சகோதரர்களின் அத்தனை முறைகேடு குட்டுகளும் பொதுவெளிக்கு வந்தன. அத்துடன் நிற்காமல் குப்தா சகோதரர்களுக்கு எதிராக திரும்பிய திசை எங்கும் எதிர்ப்பு வலுத்தது. இதனால் தென்னாப்பிரிக்காவில் குப்பை கொட்ட முடியாது என்ற காரணத்தால் குப்தா சகோதரர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பி ஓடினர். இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குப்தா சகோதரர்கள் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications