For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷியா அருகே தென்கொரிய கப்பல் மூழ்கி விபத்து: 50 மீனவர்கள் பலி?

Google Oneindia Tamil News

சியோல்: ரஷ்யா அருகே தென்கொரிய கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 50 மீனவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகிறது.

தென்கொரியாவை சேர்ந்த ஒரு தனியார் மீன்பிடி கப்பல் ஒன்று ரஷியாவின் பெர்ரிங் கடல் பகுதியில் ‘போலாக்' உள்ளிட்ட ரக மீன்களை பிடிக்க சென்றது. அதில் அவர்களில் 35 இந்தோனேசியர்கள், 13 பிலிப்பைன்ஸ் நாட்டினர், 11 தென்கொரியர்கள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் உட்ப்ட 62 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், திடீரென அக்கப்பல் கடலில் மூழ்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்கொரிய மீட்பு படையினரால், சிலரை மட்டுமே மீட்க முடிந்தது. கப்பலில் பயணம் செய்த மீதமுள்ளவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. அவர்கள் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகிறது.

தற்போது மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தென்கொரியாவில் சொகுசுக் கப்பல் மூழ்கிய விபத்தில் 300 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
South Korean officials expressed fear Tuesday of a huge death toll after rescuers failed to find any of the more than 50 fishermen missing after their ship sank amid high waves in the freezing waters of the western Bering Sea on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X