For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஹெலினா" தந்த ஆச்சரியம்.. "தொங்கா" தந்த ஷாக்.. உலகிலேயே இந்த இடத்தில் மட்டும் வைரஸ் இல்லையாம்

Google Oneindia Tamil News

பிரிட்டானியா: உலகிலேயே ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொரோனா தொற்று வைரஸ் இல்லவே இல்லையாம்.. அது என்ன நாடு தெரியுமா?
சீனாவில்தான் கடந்த 2019-ல் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது.. இது பின்னர் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது..

இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி பொருளாதாரத்திலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,514 பேருக்கு கொரோனா பாதிப்பு-251 பேர் மரணம் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,514 பேருக்கு கொரோனா பாதிப்பு-251 பேர் மரணம்

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

தொற்றை கட்டுப்படுத்த முடிந்திருக்கிறதே தவிர, ஒழிக்க முடியவில்லை.. அந்த வைரஸ் அழிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் கொரோனா பரவாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மொத்த உலகிலும் தொற்று பரவி விட்டது. ஆனால், உலகிலேயே ஒரே ஒரு இடத்தில் மட்டும் தொற்று பாதிப்பு இதுவரை இல்லையாம்..

 அட்லாண்டிக் பெருங்கடல்

அட்லாண்டிக் பெருங்கடல்

தென் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவுத் தொகுதி பெயர் செயின்ட் ஹெலினா.. இந்த தீவில் மட்டும் ஒருத்தருக்குகூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.,.. இந்த தீவில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்... எந்தவிதமான கொரோனா கட்டுப்பாடுகள், விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவுமில்லை.. தொற்று பாதிப்பும் இங்கு இல்லை.. மக்கள் இயல்பான வழக்கம்போல் இங்கு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்...

Recommended Video

    திடீரென அதிகரிக்கும் Coronavirus பாதிப்புகள்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் AY.4.2 Variant
     நெறிமுறைகள்

    நெறிமுறைகள்

    ஆனாலும், வெளி நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று செயின்ட் ஹெலினா தீவு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, தொங்கா தீவு நாட்டில் இப்போதுதான் ஒருவருக்கு முதல் முதலாக கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த தீவு நாடு, நியூசிலாந்துக்கு வட கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

    விமானம்

    விமானம்

    நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இத்தனைக்கும் அவர் 2 தடுப்பூசி டோஸையும் செலுத்திக் கொண்டவர்... ஒரே ஒரு நபருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டதால், அடுத்த வாரம் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் பிரதமர் வார்னிங் தந்துள்ளார்... மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், மற்றவர்களுக்கும் செலுத்தும் பணி அங்கு மும்முரமாகி உள்ளது.

    English summary
    St Helena is one of the few places that is still virus free and Tonga records first coronavirus case since start of pandemic
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X