துபாயில் களைக்கட்டிய ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!
துபாய்: முதலமைச்சர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ஐக்கிய அரபு அமீரக திமுக சார்பில் துபாய் லேன்ட்மார்க் ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அயலக தமிழர் வாரிய உறுப்பினரும்,அமீரக திமுக பொறுப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் துபாய் வாழ் தமிழர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவுக்கு அமீரக எழுத்தாளர் குழுமத்தின் தலைவர் ஆசீஃப் மீரான் தலைமை வகித்தார். அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஹமீது ரஹ்மான், கவிஞர் சசிக்குமார், திராவிட இயக்க சிந்தனையாளர் பிலால் அலியார், தமிழ்நாடு அரசின் பூங்குன்றனார் விருது பெற்ற எழுத்தாளர் ஜெஸிலா பானு, திரிகூடபுரம் முகம்மது முஸ்தபா. இர்ஷாத், பருத்தி இக்பால், இஞ்சினியர் பாலா, இளமுருகன், தாரிக், மணிவேல்,பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அஹமது கபீர், வி கே புரம் பாலா,உதயாநிதி ஸ்டாலின் நற்பணிமன்ற தலைவர் பாலா, பாருக், கொரடாசேரி ஜெகபர் அலி, அன்வர், தென்காசி மாவட்ட அயலக அணி நிர்வாகி இஸ்மாயில், தமிழ் எப்.எம் மகேந்திரன் , கடையநல்லுர் உதுமான , அமீன், வல்லரசு, பாவை பொறியாளர் பஹிம், காரைக்கால் செந்தில் பிரபு உள்ளிட்ட ஏராளாமான் அமீரக திமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர் கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதியாக பிளாக் துளிப் செந்தில் நன்றி கூறினார். விழாவை ஏஜிஎம் பைரோஸ்கான் தொகுத்து வழங்கிய நிலையில் பிளாக் துளிப் செந்தில் நன்றியுரை ஆற்றினார்.
தமிழ்நாட்டை போலவே துபாயிலும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பிறந்தநாள் விழாக்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications