உலகம் அழியப்போகுது.. யாரால் அழிவு ஆரம்பம்? ஸ்டீபன் ஹாக்கிங் பரபரப்பு கணிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் எப்படி எல்லாம் அழியும் என்று ஸ்டிபன் ஹாக்கிங் நிறைய காரணங்கள் சொல்லி இருக்கிறார். இதில் மிக முக்கியமான ஐந்து காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார்.

டைம் டிராவல் தொடங்கி உலகம் உருவானது வரை பேசி வரும் ஸ்டிபன் ஹாக்கிங் இந்த முறை உலக அழிவு குறித்து பேசியுள்ளார். இவரது கருத்துக்கு அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் அறிஞர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த நிலையில் தற்போது இவர் பட்டியலிட்டு இருக்கும் 5 காரணங்களும் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி இருக்கிறது. இதில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் டொனால்ட் டிரம்பும் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்.

ரோபோட் யுகம்

ரோபோட் யுகம்

'ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்' எனப்படும் புதிய தொழில்நுட்பம் தான் உலக அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ரோபோட்கள் மனித அழிவிற்கு கண்டிப்பாக காரணமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். ரோபோட்கள் மனித இனத்தை முந்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிக மக்கள்

அதிக மக்கள்

உலகில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் மக்களை தொகையும் உலக அளவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக உலகில் மக்கள் வசிக்க இடமின்றி பெரிய அளவில் பிரச்சனை உருவாகும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது இருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாறும் காலநிலை

மாறும் காலநிலை

வானத்தில் இருந்து விழும் எரியும் விண்கற்கள் கூட உலகின் அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதே சமயத்தில் இந்த விண்கற்களை விட காலநிலை மாற்றம் உலகில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். உலக வெப்பமயமாதலை இப்போதே குறைக்கவில்லை என்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் பேசியுள்ளார்.

அணு ஆயுத போர்

அணு ஆயுத போர்

எதிர்காலத்தில் நடக்கும் அணு ஆயுத போர் கண்டிப்பாக உலக அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதன்படி வடகொரிய நாடு போன்ற அணு ஆயுத பலம் பொருந்திய நாடுகள் கண்டிப்பாக அணு ஆயுத போரில் ஈடுபடும் என்று பேசியிருக்கிறார். இதன் காரணமாக பெரிய அளவில் உலகில் பிரச்சனையும், போரும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப்

இவர் சொல்லும் காரணங்களில் மிக முக்கிய காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்பும் இருக்கிறார். அமெரிக்க அதிபரின் இயற்கைக்கு முரணான நடவடிக்கையும் சட்ட திட்டமும் உலக அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார். அவரது சட்டம் அனைத்தும் மக்களை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Stephen Hawking lists five reasons for the end of the world. He says the Trump will end the world. He also listed that robot, atomic war, climate change, over pollution are the reasons for the end of the world.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற