
ஆ.. என்ன இது? மானும் அல்ல.. ஓநாயும் அல்ல.. அமெரிக்காவை அலறவிட்ட விசித்திர மிருகம்!
கலிபோர்னியா: அமெரிக்காவில் ஒரு விசித்திர மிருகம் தென்பட்டது தான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது.
அந்த மிருகத்தை பார்த்தால் ஒரு சாயலில் ஓநாயை போலவும், ஒரு பக்தத்தில் நரியை போலவும், உடல் மானை போலவும் இருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்து மக்கள் அனைவரும் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், விலங்கியல் அறிஞர்கள் இந்த மிருகத்தை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
ஜஸ்ட் மிஸ்.. கொஞ்சம் விட்டிருந்தால் முடிஞ்சிருக்கும்.. அமெரிக்காவில் பீதியை கிளப்பிய

கலிபோர்னியாவும் வனவிலங்குகளும்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பரந்து விரிந்த காடுகளின் எல்லைகளையொட்டி அமைந்துள்ளது. இதனால் ஊருக்குள் வன விலங்குகள் அடிக்கடி வந்து செல்லும். கரடி, காண்டாமிருகம், ஓநாய், நரி, பெரிய அளவிலான காட்டு பல்லிகளை பல சமயங்களில் சாலைகளில் உலாவுவதை பார்க்கலாம். இந்த விலங்குகளால் சில நேரங்களில் மனிதர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கலிபோர்னியா அரசு வன விலங்குகளை எந்த தொந்தரவுக்கும் உட்படுத்துவதில்லை. ஜாக்கிரதையாக இருக்கும்படி மனிதர்களைதான் எச்சரித்து வருகிறது.

விசித்திர மிருகம்
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ஒரு நகரில் நேற்று அதிகாலை விசித்திரமான காட்டு விலங்கு ஒன்று சாலையை கடந்து சென்றது. அங்கிருந்த ஒரு காரின் கேமராவில் அந்த விலங்கு படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓநாய், நரி, மான், நாய் போன்ற விலங்குகளின் ஒவ்வொரு உடல் பாகங்களையும் தனித்தனியாக எடுத்து அந்த விலங்குகளுக்கே அதை மாற்றி மாற்றி ஒட்ட வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படிதான் இருக்கிறது அந்த விசித்திர விலங்கு.

அது என்ன மேண்ட் உல்ஃப் (Maned Wolf)?
இதனிடையே, இந்த விசித்திர மிருகத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி, இது என்ன மிருகம் என்ற புதிர் விளையாட்டிலும் நெட்டிசன்கள் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, இந்த வீடியோ விலங்கியல் ஆர்வலர்களின் கண்களில் பட, அவர்கள் இந்த விலங்கை அடையாளம் கண்டு, அதன் பெயர் 'மேண்ட் உல்ஃப்' (Manded Wolf) எனத் தெரிவித்தனர். அது என்ன 'மேண்ட் உல்ஃப்' என கூகுளில் தட்ட, அது பார்ப்பதற்கு மட்டுமல்ல அதன் பழக்கவழக்கமும் விசித்திரமானதுதான் எனத் தெரியவந்தது.

நரியின் தந்திரமும்.. ஓநாயின் துணிச்சலும்..
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் உள்ள சில வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை விலங்கு தான் இந்த 'மேண்ட் உல்ஃப்'. இந்த விலங்குக்கு ஓநாயை போல உடலில் முடிகளும், நரியை போன்ற முகமும், மான்களை போன்ற நீண்ட கால்களும் இருக்கும். தலையில் சிங்கத்துக்கு இருப்பது பிடரி மயிர் (Mane) இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது. உருவத்தை போலவே இந்த மேண்ட் உல்ஃபுக்கு நரியின் தந்திர குணமும் உண்டு. அதே சமயத்தில், ஆபத்தில் மாட்டிக்கொண்டால் ஓநாயின் துணிச்சலுடன் எதிரிகளுடன் சண்டையிடும் குணம் கொண்டது. சிறந்த வேட்டையாடியான மேண்ட் உல்ஃப், சிறு மான்கள், முயல்கள், அணில்களை விரும்பி உண்ணும். இவை கிடைக்காத போது, மான்களை போல காட்டில் உள்ள பழங்களையும், காய்கறிகளையும் நன்றாக சாப்பிடும். சந்தேகமே இல்லாமல் இவன் 'விசித்திரன்' தான்.