தைவான் விமான விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு!
தைபே: தைவான் நாட்டில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானத்தில் பயணித்தவர்களில் 19 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தைபேயில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாலம் ஒன்றின் மோதி கீலங் என்ற ஆற்றில் விழுந்தது.
Govt' official in Taipei tells reporters at least 2 fatalities in #GE235 crash into river. pic.twitter.com/1X9rYz9D89
— Steve Herman (@W7VOA) February 4, 2015 இதனைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை விமானத்தில் பயணம் செய்தவர்களில் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணிகள் 53 பேருடன் 5 பணியாளர்களும் பயணித்தனர்.
Authorities say there are now 11 fatalities in #GE235 crash into the river in Taipei. #Taiwan #aviation #TransAsia pic.twitter.com/UzWcTyGQh0
— Steve Herman (@W7VOA) February 4, 2015 தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் இதே டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியதில் 48 பயணிகள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications