For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்கள் தான் குறியே.. விடாது துரத்தும் தாலிபான்கள்..ஆப்கனில் விழுந்த புதிய தடை.. அடபாவமே! என்னாச்சு?

ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்களுக்கு எதிராக தாலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சமீபத்தில் பல்கலைக்கழகங்கள் செல்ல மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக ஏராளமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்தனர். இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தான் தற்போது இன்னொரு அதிரடியான உத்தரவை தாலிபான்கள் பிறப்பித்துள்ளனர். ஐநா சபையில் இருந்து பல அதிகாரிகள் குழு ஆப்கானிஸ்தானை விசிட் செய்து ஆய்வு மேற்கொண்ட நிலையில் தாலிபான்கள் தற்போது புதிய உத்தரவை போட்டு ஷாக் கொடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 2021ல் அமெரிக்க படைகள் நாடு திரும்பின. இதையடுத்து உள்நாட்டு போரை துவக்கிய தாலிபான்கள் வெற்றியும் கண்டனம். தற்போது 2021 ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தாலிபான்கள் கைப்பற்றினர்.

இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில் தற்போது 2வது முறையாக கைப்பற்றினர். தற்போது அங்கு தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இவர்கள் தாலிபான்கள் மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.

ஆப்கன் பெண்கள் இனி ஆண் மருத்துவரை பார்க்கக்கூடாது.. தலிபான்கள் ஆட்டம்.. ஆனா ஆப்கன் பெண்கள் இனி ஆண் மருத்துவரை பார்க்கக்கூடாது.. தலிபான்கள் ஆட்டம்.. ஆனா

பெண்களுக்கு எதிரான தடைகள்

பெண்களுக்கு எதிரான தடைகள்

கடந்த ஒன்றரை ஆண்டு தாலிபான் ஆட்சியில் மத அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூாடது, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வகையிலான புர்கா அணிய வேண்டும், பூங்கா, ஜிம் செல்லக்கூடாது, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற கூடாது என்பன போன்ற பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் படிக்க தடை

பல்கலைக்கழகங்களில் படிக்க தடை

இதுபற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் நேதா முகமது நதீம் கூறுகையில், ‛‛பெண்களின் கல்வி தொடர்பான விஷயத்தில் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படவில்லை. திருமண விழாவுக்கு செல்வது போல் ஆடை அணிகின்றனர். ஹிஜாப் அணிவதில் உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை. மாணவிகள் ஆடைக்கட்டுப்பாடுகளை மீறுகின்றனர். மேலும் அறிவியல் பாடங்கள் பெண்களுக்கும், ஆப்கானிஸ்தானின் கலாசாரத்துக்கும் பொருத்தமானதாக இல்லை'' என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஐநாவில் இருந்து விசிட்

ஐநாவில் இருந்து விசிட்

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ஐநா மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஐநாவின் துணை பொதுச்செயலாளர் அமினா முகமது தலைமையிலான குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று பெண்களுக்கு எதிரான செயல்கள் பற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து மீண்டும் சிறுமிகள், பெண்கள் படிக்க வாய்ப்பு ஏற்படும் என கருதப்பட்டது.

புதிய உத்தரவு

புதிய உத்தரவு

இந்நிலையில் தான் தற்போது தாலிபான்கள் இன்னொரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதன்படி ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வுகளில் பெண்களை அனுமதிக்க கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும் நிலையில் தான் தற்போது இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் இன்று முதல் நுழைவுத்தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தாலிபான்கள் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

உத்தரவில் இருப்பது என்ன?

உத்தரவில் இருப்பது என்ன?

ஏற்கனவே 6ம் வகுப்புக்கு மேல் பள்ளி படிப்பை படிக்க முடியாத சூழலில் இந்த உத்தரவு என்பது பெண்களுக்கு கல்வி கிடைக்க கூடாது என்ற பிற்போக்கு தனத்தை காட்டுவதாக சர்வதே அமைப்பினர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாவுல்லா ஹஷ்மி நேற்று உறுதி செய்தார். இந்த சுற்றறிக்கையில் ‛‛பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டத்துக்கான நுழைவு தேர்வில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் இந்த ஆணையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் வருத்தம்

பல்கலைக்கழகங்கள் வருத்தம்

ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 24 மாகாணங்களில் சுமார் 140 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் சுமார் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் படித்து வந்தனர். இதில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மாணவிகள். இதனால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுபற்றி ஆப்கானிஸ்தான் தனியார் பல்கலைக்கழகங்களின் செய்தி தொடர்பாளர் முகமது கரீம் நசாரி கூறுகையில், ‛‛இது மிகவும் கவலையளிக்கிறது. நாட்டில் சில முன்னேற்றங்கள் இருக்கும் என நினைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும் மாணவர் சேர்க்கை குறைவதோடு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படும்'' என வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

English summary
Afghanistan is controlled by the Taliban. The Taliban have been enforcing numerous restrictions against women, recently banning women from studying in universities. The Taliban has now issued another drastic order amid strong protests across the world. A group of officials from the United Nations has visited Afghanistan and conducted an investigation, and the Taliban have now given a shock by giving a new order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X