For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"காப்பாத்துங்களேன்".. இப்படி ஒரு நிலைமையா.. எல்லைகளில் கதறும் தாலிபான்கள்.. ஷாக் சாட்டிலைட் போட்டோ

ஆப்கன் மக்கள் காத்திருக்கும் சாட்டிலைட் போட்டோக்கள் வெளியாகி உள்ளன

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கான் மக்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேற, அண்டை நாடுகளின் எல்லைகளில் கால்கடுக்க காத்திருப்பது தொடர்பான செயற்கைக் கோள் போட்டோ வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்! கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!

கடந்த 20 ஆண்டுகளாகவே அந்நாட்டின் அரசு படைகளுக்கும் தாலிபான்களுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், முக்கிய நகரங்களை கைப்பற்றினர் தாலிபான்கள்... அமெரிக்கப் படைகளும் வெளியேறி விட்டதையடுத்து, அவர்கள் தற்காலிக அரசை அமைத்துள்ளனர்..

 ஆப்கன் மக்கள்

ஆப்கன் மக்கள்

தாலிபான்களுக்கு பயந்து, ஆப்கன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.. நாட்டை அவர்கள் கைப்பற்றிய முதல்நாளில் இருந்தே, அந்த மக்களுக்கு பெருத்த கலக்கமும், பீதியும் தொற்றி கொண்டுள்ளது.. அவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு, நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதும், அந்த நேரத்தில் அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் உலக மக்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால், பெரும்பாலான மீடியாவில், காபூர் ஏர்போர்ட்டில் அந்நாட்டு மக்கள் காத்திருந்தது மட்டும்தான் செய்தியாக வெளிவந்தது.. ஆனால், வான்வழி மட்டுமல்லாது, தரைவழியாகவும் மக்கள் ஆப்கானை விட்டு வெளியேற காத்திருந்துள்ளது தற்போதுதான் தெரியவந்துள்ளது.

 செயற்கைகோள்

செயற்கைகோள்

இந்நிலையில், ஆப்கனை விட்டு வெளியேற, அண்டை நாடுகளின் எல்லைகளில் அந்நாட்டு மக்கள் காத்திருப்பது தொடர்பான செயற்கை கோள் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. அந்த போட்டோ, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சம்மன் எல்லையில், ஸ்பில் போல்டாக் என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.. அங்குதான் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்..

பதற்றம்

பதற்றம்

அதேபோல், தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஷிர்கான் பகுதியிலும், ஈரானை ஒட்டிய இஸ்லாம் - காலா எல்லையிலும் ஆப்கன் மக்கள் பதற்றத்துடன் காத்திருப்பதும் தெரிய வருகிறது.. இந்த போட்டோ கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது.. அதாவது ஏற்கனவே பாகிஸ்தான் தன்னுடைய எல்லை பகுதியான சமானை மூடிவிட்டது.. ஆனாலும் எல்லையை எப்படியாவது திறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் கால்கடுக்க நின்றுள்ளனர்.. கையில் உடைமைகளையும் சுமந்து கொண்டு காத்திருக்கின்றனர்...

 எல்லைகள்

எல்லைகள்

அமெரிக்கா மட்டும் ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 1,24,000 பேரை மீட்டுவந்தது.. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தனது எல்லைகளை பாகிஸ்தானை ஒட்டிய சம்மன் எல்லையிலும், தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஷிர்கான் பகுதியிலும், ஈரானை ஒட்டிய இஸ்லாம் காலா எல்லையிலும் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெடுபிடிகள்

கெடுபிடிகள்

தாலிபான் ஆட்சி அங்கு உறுதி ஆனாலும், இன்னும் அதிகாரப்பூர்வமான பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.. ஆனால் அதற்குள் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள், கெடுபிடிகள், ஏகப்பட்ட ரூல்ஸ்கள், பிறப்பிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.. அமைச்சரகங்களின் அலுவலகங்கள் மூடியே உள்ளனவாம்.. மக்களுக்கு வேலைவாய்ப்பில்லை.. கையில் பணமும் இல்லை.. எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்காலத்தை நினைத்து ஒருவித அச்சம் கலந்த பயத்தில் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள்!

English summary
Taliban: Satellite images show thousands of Afghans at Pakistan border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X