ஆப்கான்: ஆக.31க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் இருந்தால் மோசமான விளைவுதான்..தாலிபான்கள் வார்னிங்
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆக.31-க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் வெளியேறாமல் இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் அனைத்து அமெரிக்கா படைகளும் வெளியேறும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தற்போதைய நிலையில் சில ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் நிலை கொண்டுள்ளனர்.
ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் ஒருபகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா படையினர், வெளிநாட்டு விமானங்களை தரை இறக்கி பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்ப்பு அளித்து வருகின்றனர். காபூலை தாலிபான்கள் கைப்பற்றி ஒருவாரமாகிவிட்ட போதும் விமான நிலையம் இன்னமும் அவர்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.

அமெரிக்கா எச்சரிக்கை
இந்த நிலையில் காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாத இயக்கம், தற்கொலைப்படை தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது. இந்த இயக்கமானது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளைக் கொண்ட அமைப்பாகும். இதன் தலைவர்கள் ஏற்கனவே அமெரிக்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனாலும் இந்த அமைப்பு இப்போது மீண்டும் உயிர்ப்புடன் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா எச்சரிக்கை
இந்த நிலையில் காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாத இயக்கம், தற்கொலைப்படை தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது. இந்த இயக்கமானது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளைக் கொண்ட அமைப்பாகும். இதன் தலைவர்கள் ஏற்கனவே அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனாலும் இந்த அமைப்பு இப்போது மீண்டும் உயிர்ப்புடன் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு தாலிபான்கள் வார்னிங்
அமெரிக்காவின் இந்த கருத்தானது, காபூலில் தொடர்ந்து தமது நாட்டு ராணுவத்தை நிலைநிறுத்தத்தான் என்பது தாலிபான்களின் சந்தேகம். இதனால் தற்போது ஆகஸ்ட் 31-ந் தேதிக்கு பின்னரும் அமெரிக்கா படைகள் ஆப்கானில் இருக்கக் கூடாது; அப்படி இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். அதாவது அமெரிக்கா படைகளுடன் மீண்டும் மோதுவதற்கு தாலிபான்கள் தயாராகிவருகின்றனராம்.

காபூலில் மோதல்
இதனிடையே காபூலில் இருந்து தொடர்ந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தொடருகின்றன. காபூலில் சிக்கித் தவித்த சீக்கியர்கள், இந்துக்களை இந்திய விமானங்கள் பாதுகாப்பாக அழைத்து வந்து கொண்டிருக்கின்றன. அப்படி அழைத்துவரப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், காபூல் நிலைமை படுமோசமாக இருப்பதாக கவலை தெரிவித்தார். மேலும் காபூல் விமான நிலையத்தில் ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத குழுவினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ஆப்கான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications