வேகமாக முன்னேறும் தலீபான்கள்.. ஹெராட் போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றினர்.. அடிபணியும் ராணுவம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் தலீபான்கள் ஹெராட் போலீஸ் தலைமையகத்தை அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ் தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலை கொண்டு தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கி வந்த அமெரிக்கா படைகளை விலக்கிக் கொண்டது.
இதன்பின்னர் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்களது கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். அவர்கள் நினைத்தபடியே ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளையும் கைப்பற்றி உள்ளனர்.

தலிபான்கள் ஆதிக்கம்
பல்வேறு முக்கிய மாகாணங்களையும் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளனர் பயங்கரவாதிகள். 9 மாகாண தலைநகரங்கள்,விமான நிலையங்கள் 290க்கும் அதிகமான மாவட்டங்களில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலைநகர் காபூலை முக்கிய இலக்காக வைத்துள்ள தலீபான்கள் அதனை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகின்றனர்.

போலீஸ் தலைமையகம்
தலைநகர் காபூலுக்கு அருகே அமைந்துள்ள மாகாணங்களை எல்லாம் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளன வந்துள்ளனர். தற்போது காபூலில் இருந்து 150 கி.மீ தொலைவே இருக்கும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான கஸ்னியை கைப்பற்றினார்கள். இந்த நிலையில் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் போலீஸ் தலைமையகத்தை தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.

ஹெராட் விமான நிலையம்
கஸ்னி மாகாணத்தை கைப்பற்றிய பயங்கரவாதிகள் ஆப்கான் படைகளை முறியடித்து விட்டு ஹெராட்டுக்குள் நுழைந்து போலீஸ் தலைமையகத்தை கைபற்றியுள்ளனர். இதனால் ஹெராட் விமான நிலையத்தில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கஸ்னியை கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகரை நாட்டின் தென் மாகாணங்களுடன் இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலையை தலீபான்கள் துண்டிக்கிறனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆப்கான் அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் தலீபான்கள் ஹெராட் போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அவரசமாக அழைப்பு விடுத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications