அயலக தமிழர் நல வாரிய உறுப்பினரை கவுரவித்த இந்திய தூதரகம்! சமூக சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்!
துபாய்: அமீரக திமுக பொறுப்பாளரும், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானின் சமூக சேவையை பாராட்டி துபாயில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் விவகார செயலாளர் அப்துல்லா லஷ்காரி ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.

பணி நிமித்தமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அங்கு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டவர்கள், போலி ஏஜெண்ட்கள் மூலம் துபாய்க்கு சென்று அங்கு ஊதியமும், சாப்பாடு கிடைக்காமல் தவித்தவர்கள் என பலருக்கும் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் என்ற முறையில் எஸ்.எஸ்.மீரான் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
அதுமட்டுமல்ல துபாயில் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறார். இது போன்ற சமூக சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் இன்னும் பலரும் இந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள் என நம்புகிறது துபாயில் உள்ள இந்திய தூதரகம்.

தன்னார்வமாக சமூகநலப் பணிகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதன் மூலம் துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் பணிச்சுமை குறைவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவ்விழாவில் அமீரகத்தில் உள்ள பல்வேறு இந்திய முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், சமூக செயற்பாட்டார்களும் கலந்து கொண்டனர்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications