தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா இலக்கத்தியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்ட்டுள்ளார். அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எழுத்துக்களில் முத்திரை பதித்ததற்காக அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பாரடைஸ்
73 வயதான அப்துல்ரசாக் குர்னா தான்சானியாவை பூர்விகமாக கொண்டவர். 1960-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு அகதியாக வந்து சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா, 10 நாவல்களை எழுதியுள்ளார். 1994-ம் ஆண்டு இவரால் வெளியிடப்பட்ட பாரடைஸ், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான்சானியாவில் வளர்ந்த ஒரு சிறுவனின் கதையை கூறியது. புக்கர் பரிசையும் வென்றுள்ளது.

ஆச்சரியமாக இருந்தது.
அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசுடன் 1.14 மில்லியன் டாலர் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படும். இந்த உயரிய விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அப்துல்ரசாக் குர்னா மகிழ்ச்சியுடன் கூறுகையில், ' இது மிகவும் சிறந்தது - இது ஒரு பெரிய பரிசு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அறிவிக்கப்பட்டதை கேட்கும்வரை என்னால் நம்ப முடியவில்லை' என்று கூறியுள்ளார்.

பார்வையைத் திறக்கின்றன
இந்த விருது அறிவித்த இலக்கியத்திற்கான நோபல் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அப்துல்ரசாக் குர்னாவின் உண்மைக்கான அர்ப்பணிப்பு மற்றும் எளிமைப்படுத்துவதில் அவரது வெறுப்பு வியக்கத்தக்கது. அவரது நாவல்கள் ஒரே மாதிரியான விளக்கங்களிலிருந்து பின்வாங்குகின்றன. உலகின் பிற பகுதிகளில் பலருக்கு அறிமுகமில்லாத கலாச்சார ரீதியாக பன்முகப்படுத்தப்பட்ட கிழக்கு ஆபிரிக்காவிற்கு எங்கள் முழு அளவிலான பார்வையைத் திறக்கின்றன.

இயற்பியலுக்கான நோபல் பரிசு
நாவல்களின் கதாபாத்திரங்கள் கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களுக்கிடையேயான இடைவெளியில், ஒரு வாழ்க்கைக்கும் ஒரு வாழ்க்கைக்கும் இடையே ஒரு இடைவெளியில் தங்களைக் காண்கின்றன'' என்று இலக்கியத்திற்கான நோபல் குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதேபோல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications