ஹவுடி மோடி நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடிய ராப் இசை சிறுவன் ஸ்பார்ஷ் ஷா!
Recommended Video
ஹூஸ்டன்: ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு தேசிய கீதத்தை 16 வயதான ரேப் இசை பாடகர் பாடியுள்ளார்.
அமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனுக்கு வந்தார்.
ஹூஸ்டன் விமான நிலையத்தில் இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகள் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் ஹூஸ்டனில் என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்ட ஹவுடி மோடி நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய கீதம்
டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் எப்படி இருக்கிறீர்கள் (How do you do?) என்பதன் சுருக்கமே ஹவுடியாகும். இந்த கூட்டத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 16 வயது ராப் பாடகர் ஸ்பார்ஷ் ஷா கலந்து கொண்டு தேசிய கீதத்தை மோடி, டிரம்ப் முன்பு பாடினார்.

கனவு நனவு
16 வயதான ஷா ஒரு வகை எலும்பு தொடர்பான அரிய வகை நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இவர் நியூ ஜெர்சியில் வசித்து வருகிறார். ராப் பாடகரான இவர் பாடலாசிரியர், உத்வேகமளிக்கும் பேச்சாளர் ஆவார். நீண்ட நாட்களாக மோடியை சந்திக்க விரும்பிய இவரது கனவு ஞாயிற்றுக்கிழமை நனவானது.

முதல் முறை
இதுகுறித்து அவர் கூறுகையில் ஏராளமானோர் முன்னிலையில் நான் தேசிய கீதம் பாடியது பெரிய விஷயமாகும். அதை பாடும் போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். மடிசன் ஸ்கொயர் கார்டனில் முதல் முறையாக மோடியை பார்த்தவுடன் அவரை சந்திக்க விரும்பினேன்.

400 பாடகர்கள்
எனினும் அவரை டிவியில் மட்டுமே பார்த்தேன். கடவுள் கிருபையால் அவரை சந்தித்து அவர் முன் நான் தேசிய கீதம் பாடும் வாய்ப்பு கிடைத்தது என்றார். தேசிய கீதம் பாடிய 400 பாடகர்களில் ஸ்பார்ஷும் ஒருவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications