"தலை" துண்டாகி இருக்கும்.. ஜஸ்ட் மிஸ்! லிப்டில் போகும்போது இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீங்க
மாஸ்கோ: லிப்ட்டை நாம் ஏன் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி
நமது அன்றாட வாழ்க்கையை எளிமைப்படுத்த பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளன. அதேநேரம் அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவில்லை என்றால் அது ஆபத்திலும் முடிய வாய்ப்பு உள்ள.
இதனிடையே ரஷ்யாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் லிப்ட்டினால் எந்தளவு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ரஷ்யா
அந்த மனிதர் சற்றே தாமதித்து இருந்தாலும் கூட அவரது தலை மிக எளிதாகத் தூண்டாகி இருக்கும். ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்தச் சம்பவம் நடப்பதிற்கு சில வாரங்களுக்கு முன்னதாக தான், லிப்ட்டில் பிரச்சினை இருப்பதாகவும் திடீரென அது உள்ளே குலுங்குவதாகவும் சிலர் புகார் அளித்து இருந்தனர். சில வாரங்களில் இப்போது மீண்டும் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

வீடியோ
அந்த வீடியோவில், லிப்டில் இருந்து ஒருவர் வெளியே செல்கிறார். இதையடுத்து மொபைலை பார்த்தவாறு, மற்றொரு நபர் லிப்டில் நுழைய முயல்கிறார். அப்போது திடீரென வகையில் லிப்ட் மூட ஆரம்பிக்கிறது. மொபைலை பார்த்தவாறு வந்ததால் அவரும் இதை முதலில் கவனிக்கவில்லை. முதலில் அந்த நபர் மூடும் கதவைத் தடுக்க முயல்கிறார்.

ஜஸ்ட் மிஸ்
அதேநேரம் லிப்ட் திடீரென மேலேயும் செல்ல தொடங்குகிறது. அந்த நபரின் காலும் கூட லிப்டில் மாற்றிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் லிப்டில் இருந்து அப்படியே பின்னால் சென்று விடுகிறார். இதன் மூலம் நூலிழையில் தப்பித்து உள்ளது. சில நொடிகள் தாமதித்து இருந்தாலும் அந்த நபர் துண்டாகி இருப்பார்.

கருத்து
மொத்தம் 9 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. லிப்ட், எஸ்கிலேட்டர் உள்ளிட்டவற்றை நாம் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த நபர் எப்படியோ தப்பித்துவிட்டார், அதேநேரம் குழந்தைகள் யாராவது அதில் சிக்கியிருந்தால் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ரஷ்யா கட்டுமானம்
அதேநேரம் இதுபோன்ற மோசமான நிலையில் கருவிகள் உள்ளது ரஷ்யாவில் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. ரஷ்யாவில் பல இடங்களில் இருக்கும் கட்டிடங்கள், இயந்திரங்கள் மிக மோசமான சூழ்நிலையில் தான் இருக்கிறது. அங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் சோவியத் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இதுபோன்ற விபத்துகள் அங்குத் தொடர்ந்து நடந்து வருகிறது.

லிப்ட் சம்பவங்கள்
சமீபத்தில் இதேபோலத் தான் பிரிட்டன் நாட்டிலும் லிப்ட் சம்பவம் செய்தது. அங்கு போர்ட்ஸ்மவுத்தில் உள்ள விக்டரி பிசினஸ் சென்டரில் பாராலீகல் அஜிசுல் ரேஹான் என்பவர் லிப்டில் மாட்டிக் கொண்டார். எதோ ஒரு சில நிமிடங்கள் இல்லை. பாண்டியராஜன் திரைப்படத்தில் வருவது போல இரவு முழுவதும் அங்கு அவர் சிக்கிக் கொண்டார். கடும் போராட்டத்திற்குப் பின், காலை 7 மணிக்குத்தான் அவர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications