For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கர்நாடகா ஜிஹாதிகள்' பாணியில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டி லண்டனில் தாக்குதல்!

வாகனங்களை தாறுமாறாக ஓட்டி தீவிரவாதிகள் நடத்தி வரும் இந்த தாக்குதல்கள் கர்நாடக மாநில ஜிஹாதிகள் நடத்தும் தாக்குதல் முறையாகும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லண்டன்: வாகனங்கள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயன்படுத்தும் முறை கர்நாடக மாநில ஜிஹாதி தீவிரவாதி ஒருவரிடம் இருந்து தொடங்கப்பட்டது.

லண்டன் நகரின் மத்திய பகுதியில் பாலம் ஒன்றில் நேற்று இரவு பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று தாறுமாறாக பலமுறை மோதியது. இதில் பாதசாரிகள் பலரும் தூக்கி வீசப்பட்டனர்.

அதேசமயம், இன்னொரு பகுதியில் வேனிலிருந்து பாய்ந்த மர்ம நபர்கள் கத்தி, ஆயுதங்களைக் கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினர். மொத்தம் 3 இடங்களில் அதாவது லண்டன் பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.

 6 பேர் பலி

6 பேர் பலி

இந்த 3 சம்பவங்களிலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது தீவிரவாதத் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

 வாகனங்களே ஆயுதம்

வாகனங்களே ஆயுதம்

ஐஎஸ் தீவிரவாதவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு பெரும்பாலும் பயன்படுத்துவது வாகனங்களே ஆகும். பிரான்ஸ் தாக்குதலாக இருக்கட்டும், ஜெர்மனியில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும்., தற்போது லண்டனில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும் தீவிரவாதிகளின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயுதம் வாகனங்களாகும். வாகனங்களை கொண்டே படுகொலைகளை செய்ய வேண்டும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த முறையையே பயன்படுத்தினர்.

 வழக்கமான பாணி

வழக்கமான பாணி

வாகனங்களை தாறுமாறாக ஓட்டி தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் நடத்திய தாக்குதலில் வாகனங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2007-ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த காரை தாறுமாறாக ஓட்டி தாக்குதல் நடத்திய பெங்களூரை சேர்ந்த கஃபீல் அகமதுவும் இதே முறையை தான் கையாண்டார்.

 விசாரணையில் அதிர்ச்சி

விசாரணையில் அதிர்ச்சி

இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் நடத்திய விசாரணையில் பிரபல சுற்றுலா தலமான கோவாவில் வேனில் வெடிபொருள்களுடன் தாக்குதல் நடத்த கஃபீல் அகமது திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவங்களில் இருந்து நன்றாக தெரிவது என்னவென்றால் தீவிரவாதிகள் யாரும் தற்போது ஆயுதங்களையோ வெடிபொருள்களையோ பயன்படுத்துவதில்லை. மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய அதே சமயம் உயிழப்புகளை அதிகம் ஏற்படுத்தக் கூடிய வாகனங்களை பயன்படுத்துவதையே அவர்கள் விரும்புகின்றனர்.

English summary
A van ran over pedestrians causing multiple casualties in the London Bridge area. The vehicle has yet again been used as a weapon of terror.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X