மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு கைக்குழந்தை உள்பட 26 பேரை கொன்ற கொடூரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. அவசரமாக தரையிறங்கிய விமானம்

டெக்சாஸ்: டெக்சாஸில் தேவாலயத்திற்குள் புகுந்து 26 பேரை சுட்டுக் கொன்ற நபர் தனது மகனை அடித்து மண்டையை உடைத்தது தெரிய வந்துள்ளது. மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸில் இருக்கும் பாப்டிஸ்ட் தேவாலயத்திற்குள் புகுந்த முன்னாள் விமானப்படை அதிகாரி கெல்லி கண்மூடித்தனமாக சுட்டதில் 26 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தை அடுத்து கெல்லி மூன்று துப்பாக்கி குண்டடி பட்டு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேவாலயம்

தேவாலயம்

கெல்லியின் மாமியார் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். அவரை எதிர்பார்த்து தான் கெல்லி தேவாலயத்திற்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மாமியாருக்கு கெல்லி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன்

மகன்

விமானப்படையில் வேலை பார்த்த போது கெல்லி தனது மனைவி டெஸ்ஸாவை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். டெஸ்ஸாவின் முந்தைய திருமணம் மூலம் பிறந்த மகனை(கைக்குழந்தையை) கெல்லி அடித்ததில் மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டது.

விமானப்படை

விமானப்படை

மனைவி மற்றும் மாற்றான் குழந்தையை தாக்கியதால் கெல்லி விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் நீக்கப்பட்ட விபரம் எஃப்பிஐ டேட்டாபேஸில் சேர்க்கப்படவில்லை. அதனால் தான் கெல்லி துப்பாக்கிகள் வாங்க யாரும் தடை விதிக்கவில்லை.

கொலை

கொலை

மாமியார் மற்றும் இரண்டாவது மனைவியை எதிர்பார்த்து கெல்லி நடத்திய தாக்குதலில் 18 மாத குழந்தை பலியாகியுள்ளது. பலியான 26 பேரில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Texas shooter targeted the Baptist church expecting his mother-in-law to be there.
Please Wait while comments are loading...