Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றிக்குறி.. சந்தோசமாக போஸ் கொடுத்த தாய்லாந்து சிறுவர்கள்.. வெளியான வைரல் வீடியோ!

தாய்லாந்து குகையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அவர்கள் இந்த வீடியோவில் சந்தோசமாக வெற்றிக்குறி காட்டி இருக்கிறார்கள்.

    கடந்த 19 நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.விளையாட்டு சுற்றுலா சென்ற இந்த 13 பேரும் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.

    சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மூன்றுநாள் மீட்பு பணியின் முடிவாக, நேற்று முதல்நாள் மாலை எல்லோரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

    தற்போது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.இதில் சில சிறுவர்களுக்கு தற்போது நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது.அதேபோல் சிலருக்கு வெள்ளை அணுக்கள் அதிக அளவில் குறைந்து இருக்கிறது.

    Thailand Cave Rescue: Viral video of boys getting treatment released

    இவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர்களின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் தங்களது கட்டிலில் சிகிச்சை பெற்றுவிட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பது பதிவாகி உள்ளது . அதேபோல் இவர்கள் சந்தோசமாக வெற்றிக்குறியும் காட்டி வருகிறார்கள்.

    இவர்கள் இப்போது நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார்கள். அவர்களை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களின் உடல்நிலை மிகவும் சரியாக இருக்கிறது என்பதை உலகிற்கு தெரிவிக்கவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+