For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவடி.. அலகு.. சாமியாட்டம்.. களைகட்டிய திருவிழா.. இது பழனி இல்லங்க தாய்லாந்து.. சூப்பர் திருவிழா

Google Oneindia Tamil News

பாங்காக்: தாய்லாந்து நாடு இந்தியாவின் பல பண்பாட்டு கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அந்நாட்டின் திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் இவை பிரதிபலிப்பதை நம்மால் பார்க்க முடியும்.

இந்நாட்டில் 95%க்கும் அதிகமானோர் பௌத்த சமயத்தை சார்ந்திருந்தாலும் அவர்கள் வழிபாட்டு முறையில் ஈடுபட்டு, புத்தரை கடவுளாக பாவித்து வணங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அந்நாட்டில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. பலரும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறன.

உத்தவ் தாக்கரேக்கு கடும் அதிர்ச்சி.. 3000 உறுப்பினர்கள் கூண்டோடு அணி மற்றம்.. ஏக்நாத் ஷிண்டே குஷி! உத்தவ் தாக்கரேக்கு கடும் அதிர்ச்சி.. 3000 உறுப்பினர்கள் கூண்டோடு அணி மற்றம்.. ஏக்நாத் ஷிண்டே குஷி!

'தாய்' கலாச்சாரம்

'தாய்' கலாச்சாரம்

தாய்லாந்துக்கு அடிப்படையில் தனியான பண்பாட்டு விழுமியங்கள் ஏதும் கிடையாது. ஆனால் காலப்போக்கில் அந்நாடு இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பண்பாடு செழுமையான நாடுகளிடமிருந்து சில கூறுகளை எடுத்துக்கொண்டு தனக்கென புதிய பண்பாட்டு கலாச்சாரத்தை உருவாக்கிக்கொண்டது. இந்நாட்டில் 95%க்கும் அதிகமானோர் பௌத்த சமயத்தை சார்ந்திருந்தாலும் அவர்கள் கடவுள் வழிபாட்டு முறையில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

ஆன்மா மற்றும் மறுபிறவி ஆகியவை கிடையாது என்றும், நாம் எதை செய்வதாக இருந்தாலும் அதனை இந்த பிறவியிலேயே செய்ய வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் புத்த மதத்தை பின்பற்றும் தாய்லாந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சிறிய வீடுகளை கட்டி வைத்துள்ளனர். தங்கள் முன்னோர்கள் இந்த வீடுகளில் வசிப்பதாகவும், அவர்கள் நம்புகின்றனர். இந்த வீடுகளில் உள்ள தங்களது முன்னோர்களுக்கு இவர்கள் படையலையும் இடுகின்றனர்.

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

இவ்வாறு செய்யவில்லையெனில் முன்னோர்களின் ஆன்மா தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்குள் வந்து தங்களை வாழ விடாமல் செய்துவிடும் என்றும் நம்புகின்றனர். அதேபோல திருமணங்களிலும் மத சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. திருமணத்திற்கான தேதி கூட புத்த பிக்குகளிடம்தான் குறித்து பெறப்படுகிறது. இந்த வழக்கங்கள் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. தாய் மக்களின் கொண்டாட்டங்களில் மிக முக்கியமானது திருவிழாக்கள்தான்.

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

குறிப்பாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறும் 'ஃபூகெட் சைவ' திருவிழா உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் மக்கள் புத்தரை வழிபடுவதில்லை. சிவனை முதன்மையாக கொண்ட 9 கடவுள்களுக்காக மக்கள் இந்த திருவிழாவை நடத்துகின்றனர். இவ்வாறு இருக்கையில், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த அலகு குத்திகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 'வேலை' கொண்டு அலகு குத்திக்கொள்வதை போல, அங்கு கத்தி, ஈட்டி என கூர்மையான பொருள் எது இருந்தாலும் அதனை கொண்டு அலகு குத்திக்கொள்கிறார்கள்.

ஐதீகம்

ஐதீகம்

இவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படும் காயத்திலிருந்து கடவுள் தன்னை காப்பார் என்பது அம்மக்களின் நம்பிக்கை. இது மட்டுமல்லாது தீமிதி நிகழ்வுகளிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் உடல் தூய்மையடைவதாக நம்புகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு தற்போது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

English summary
Thailand has many cultural elements of India. We can see these reflected in the country's festivals, weddings and mourning events. Although more than 95% of the people in this country belong to the Buddhist religion, they are involved in worship and worship Buddha as God. In this case, festivals in the country have stopped. Many people are paying off their fines. Videos related to this are currently going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X