For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூயார்க்கில் முஸ்லீம்களை கொல்ல திட்டமிட்ட கிறிஸ்தவ பாதிரியார் மட்டும் ஸ்பெஷலா?

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க்கில் வசிக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த முஸ்லீம்களை கொலை செய்ய திட்டமிட்ட கிறிஸ்தவ பாதிரியார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் விரைவில் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

அமெரிக்காவின் டென்னிஸி மாநிலத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ பாதிரியாரான ராபர்ட் டக்கார்ட். அவர் நியூயார்க்கில் பெனிசில்வேனியா எல்லையோரம் வசித்து வரும் சுமார் 200 கருப்பினத்து முஸ்லீம்களை கொலை செய்ய திட்டமிட்டார். அவர் ஒரு எப்.பி.ஐ. உளவாளியை சந்தித்து அவரிடம் அந்த முஸ்லீம்களை கொல்ல தான் எவ்வாறு வெடிகுண்டை தயாரிக்கப் போகிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.

மேலும் ராபர்ட் முஸ்லீம்களை தாக்கும் திட்டம் மற்றும் அதற்காக தான் வைத்திருந்த எம்-4 ராணுவ துப்பாக்கியையும் அவரிடம் காண்பித்துள்ளார். அந்த முஸ்லீம்களால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்று நினைத்த ராபர்ட் அவர்களை கொலை செய்ய முடிவு செய்தார். கடவுள் மீது தான் வைத்திருக்கும் அன்பை இந்த தாக்குதல் நிரூபிக்கும் என்று அவர் நினைத்தார்.

அந்த 200 முஸ்லீம்களை கொன்று அவர்களின் உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டுமாறு அவர் தனது ஆதரவாளர்களிடமும் தெரிவித்துள்ளார். நல்லவேளையாக அவர் தாக்குதலை நடத்தும் முன்பு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரால் யாருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவில்லை என அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

முஸ்லீம்களை கொல்லத் திட்டமிட்ட பாதிரியார் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Christian minster who plotted to kill muslims was released on bail and he may go free soon in the USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X