ஷார்ஜா சர்வதேச புத்தக காட்சியில் 17 லட்சம் விசிட்டர்ஸ்! 13 லட்சம் புக்ஸ்! பங்கேற்ற 83 நாடுகள்!
ஷார்ஜா: கடந்த 2ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்கிய ஷார்ஜா சர்வதேச புத்தக காட்சி 13ஆம் தேதியுடன் நிறைவுற்றுள்ளது.
உலகம் முழுவதும் இருந்தும் 83 நாடுகளை சேர்ந்த புத்தக பதிப்பக நிறுவனங்கள் சுமார் 13 லட்சம் தலைப்புகளில் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தன.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து துபாய் சென்றிருந்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் 67 பேரும் அவர்களுடன் சென்றிருந்த 5 ஆசிரியர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.

அமீரக திமுக
மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்துகொண்டார். அங்கு அவரை பார்த்த ஷார்ஜா வாழ் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும், அமீரகத் திமுகவினரும் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர். கேரள சென்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுத்து அமைச்சர் அன்பில் மகேஷை புத்தக காட்சிக்கு அழைத்துச் சென்ற ஐக்கிய அரபு அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான், தமிழ் அமைப்பினரை அமைச்சரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அமைச்சர் பேச்சு
இதனிடையே ஆயிரக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில் ஷார்ஜா சர்வதேச புத்தக காட்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட போது அவரை சூழ்ந்துகொண்ட அமீரகத் திமுகவினரும், தமிழர்களும் ஆர்வமுடன் செல்ஃபி எடுக்க போட்டி போட்டனர். அனைவருடனும் நின்று செல்ஃபி எடுத்துவிட்டு கூலாக புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

அமெரிக்க பதிப்பகம்
இதனிடையே ஷார்ஜா புத்தக கண்காட்சியில் ஸ்டால் போட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த அன்வர் ஒன் இந்தியா தமிழிடம் தனது புத்தக காண்காட்சி அனுபம் பற்றி கூறியதாவது; ''ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் கல்ந்துகொள்வது இதுவே எனக்கு முதல்முறை. எல்லாம் நல்ல படியாக போகிறது. எங்கள் பதிப்பக புத்தகத்துக்கு இங்கு நல்ல வரவேற்பு இருப்பதை பார்க்கிறேன்.''

லெபனான் புத்தக பதிப்பகம்
இதேபோல் லெபனான் நாட்டை சேர்ந்த அஸ்மா என்பவரும் தனது புத்தக கண்காட்சி அனுபவம் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்து கொண்டதாவது; ''ஷார்ஜா புத்தக கண்காட்சியில் ஆர்கிடெக்சர், இண்டீரியர், கிராபிக் டிசைனர், ஃபேஷன், என பல தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறேன். விலைகளில் மக்களுக்கு சலுகையும் கொடுக்கிறேன்.'' இதனிடையே தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு ஷார்ஜா புத்தக கண்காட்சியை பார்வையிட்டதோடு தேவையான புத்தகங்களையும் வாங்கி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications