Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள Strait of Hormuz என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், ஹார்முஸ் நீரிணையை உலகப் பொருளாதாரத்தின் "இதயத்துடிப்பு" என்று அழைக்கலாம். 33 கிமீ அகலம் கொண்ட நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்து ஒரு நாள் நிறுத்தப்பட்டால் கூட, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும். இது உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வல்லமை உடையது. ஈரான் இந்த நீரிணையை "மூடிவிட்டதாக" அறிவித்துள்ளது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலுக்குப் பிறகு, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை இந்த வழியாக எந்தக் கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என்று எச்சரித்திருக்கிறது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தப் பாதை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுபோய்விட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் இந்தக் கடல் பகுதிக்கு வழங்கும் பாதுகாப்பை ரத்து செய்துள்ளன.

The Strait of Hormuz is the heart of the world Iran gives a big twist to India and America


ஹார்முஸ் நீரிணை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது

உலகில் நுகரப்படும் கச்சா எண்ணெய்ப் பொருட்களில் சுமார் 20% முதல் 30% வரை ஹார்முஸ் நீரிணை என்ற ஒரு குறுகிய பாதை வழியாகவே செல்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தங்கள் எண்ணெயை உலக நாடுகளுக்கு அனுப்ப இந்தப் பாதையையே நம்பி இருக்கின்ற்ன. இது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. இதன் குறுகிய பகுதி சுமார் 33 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்டது. இதில் கப்பல்கள் செல்வதற்கான பாதைகள் இன்னும் குறுகலானவை ஆகும். இந்தப் பாதையின் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

பொருளாதாரத்தையே முடக்கும்

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்து ஒரு நாள் நிறுத்தப்பட்டால் கூட, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வை ஏற்படுத்தும். இது உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வல்லமை உடையது. ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே (குறிப்பாக அமெரிக்கா) பதற்றம் ஏற்படும் போதெல்லாம், ஹார்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரிப்பது வழக்கம். இதனால் இது உலகின் மிகவும் பதற்றமான மற்றும் தற்காப்பு ரீதியாக முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை என்பது வெறும் கடல் பாதை மட்டுமல்ல, அது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் கருவியாவும் இருக்கிறது.

யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

ஹார்முஸ் நீரிணை சட்டரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் இதன் கட்டுப்பாடு இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சட்டப்படி (UNCLOS), ஹார்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை. இது எந்த ஒரு தனி நாட்டுக்கும் சொந்தமானது கிடையாது. கப்பல்கள் தடையின்றி செல்ல அனைத்து நாடுகளுக்கும் உரிமை இருக்கிறது.

கப்பல்கள் செல்லும் பாதை

ஆனால் இந்தப் பாதையின் ஒரு பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள்ளும், மறுபகுதி ஓமன் நாட்டின் எல்லைக்குள்ளும் இருக்கிறது. ஆனால், கப்பல்கள் செல்லக்கூடிய ஆழமான பாதைகள் ஈரானுக்கு மிக அருகில் இருக்கிறது. இதுதான் நிலைமையை இப்போது கடுமையான சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் கடற்படை மூலம் இந்தப் பாதையை எளிதில் கண்காணிக்கும் மற்றும் தடுக்கும் நிலையில் தான் நிலைமை இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரான் இந்தப் பாதையை மூடுவதாக அறிவித்தவுடன், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% க்கும் மேல் உயர்ந்து இருக்கிறது. இந்தப் பாதை நீண்ட காலம் மூடப்பட்டால், அது உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும். ஈரான் இந்தப் பாதையை முழுமையாகத் தனது "சொந்த உடைமை" என்று சொல்ல முடியாது என்றாலும், தனது ராணுவ பலத்தால் இந்தப் பாதையை "செயல்பாட்டு ரீதியாக" தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது உலகின் பல நாடுகளை பாதித்தாலும் இந்தியாவை தான் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+