For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு மெல்லிய கோடு... இப்படித்தான் கண்டுபிடித்தார்கள் செவ்வாயின் தண்ணீரை...!

Google Oneindia Tamil News

நாசா: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கலாம் என்பது அனுமானமாக மட்டுமே இருந்து வந்தது. அதை உறுதிப்படுத்த எந்த ஒரு தகவலும், ஆதாரமும் விஞ்ஞானிகளிடம் இல்லாத நிலை. இந்த நிலையில் தற்போதைய முடிவுக்கு நாசா வருவதற்கு பலவிதமான ஆய்வுகளை அது செய்ய வேண்டி வந்தது.

மிக மிக விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே ஆம், தண்ணீர் இருக்கிறது என்ற முடிவை எட்டியது நாசா.. ஆனால் நாசாவை மண்டை காய வைத்து விட்டது இந்த ஆய்வு என்பதை விட எதை வைத்து நாசா ஆய்வு செய்தது என்பதுதான் சுவாரஸ்யமானது. கருப்பு நிறத்திலான நீண்ட நீண்ட கோடுகள்தான் நாசாவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

நமக்குப் பார்க்க நீண்ட கோடுகளாகத்தான் இவை தெரியும்.. ஆனால் இவைதான் நீர் வழிந்தோடிய வழித்தடங்கள் ஆகும். இவை நீர் வழிந்தோடிய வழித்தடங்கள்தான என்பதைச் சொன்னவர்தான் லுஜேந்திரா ஓஜா.

எங்கே இருக்கிறது தண்ணீர்?

எங்கே இருக்கிறது தண்ணீர்?

ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய கடல்கள், ஆறுகள், நீர்நிலைகள் இருந்தன என்று கூறிய விஞ்ஞானிகள் தற்போது அவை இல்லை என்று கூறி வந்தனர். இருப்பினும் நிச்சயம் தற்போதும் செவ்வாயில் எங்காவது தண்ணீர் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்து வந்தனர்.

உறை நிலையில் தண்ணீர்

உறை நிலையில் தண்ணீர்

இந்த நிலையில்தான் பல்வேறு விண்கல ஆய்வுகள் மூலம் செவ்வாயின் சிகரங்களிலும், துருவப் பகுதிகளிலும் தண்ணீர் உறை நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

மெல்லிய கோடுகள்

மெல்லிய கோடுகள்

ஆனால் இந்த தண்ணீரை உறுதிப்படுத்துவதில் தெளிவு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான், பனி மலைகளிலும், பிற தாழ்வான பகுதிகளிலும் காணப்பட்ட கருமை நிறத்திலான கோடுகள் விஞ்ஞானிகளைக் கவர்ந்தன.

நீள்கிறது.. மறைகிறது

நீள்கிறது.. மறைகிறது

இந்தக் கோடுகள் என்னவாக இருக்கும் என்ற ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. அந்தக் கோடுகள் வருடத்தில் சில முறை நீட்சி அடைவதும் அடுத்த ஆண்டு மறைவதுமாக இருந்ததைக் கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.

ரெக்கரிங் ஸ்லோப் லீனே

ரெக்கரிங் ஸ்லோப் லீனே

இந்த கோடுகளை ரெக்கரிங் ஸ்லோப் லீனே (recurring slope lineae அல்லது R.S.L) என்று பெயரிட்டனர் விஞ்ஞானிகள். இந்தக் கோடுகளைத்தான் லுஜேந்திரா ஓஜா தீவிரமாக ஆராய்ந்தார்.

அட அதுதாங்க தண்ணீர்

அட அதுதாங்க தண்ணீர்

அவருக்கு என்ன தோன்றியது என்றால் இந்த லீனேக்கள் நிச்சயம் தண்ணீர் வழிந்தோடும் தடங்களாகத்தான் இருக்க வேண்டும். இவை நீள்வதும், குறைவதுமாக இருப்பதால் நிச்சயம் தண்ணீர் திரவ நிலையில் இருக்கும் என்பதைக் கண்டறிந்து சொன்னார்.

எப்படி கான்க்ரீட் உறைகிறதோ அதுபோல

எப்படி கான்க்ரீட் உறைகிறதோ அதுபோல

இதுறித்து அவர் கூறுகையில் ,எப்படி கான்க்ரீட்டானது ஈரமாக இருக்கும்போதும், காயும்போதும் காட்சி தருமோ அதுபோலத்தான் இதுவும் இருக்கிறது. எனவே நிச்சயம் இது தண்ணீர் வழிதான் என்று அடித்துச் சொன்னார் ஓஜா.

ஹைட்ரேட்டட் உப்பு

ஹைட்ரேட்டட் உப்பு

தொடர் ஆய்வின் மூலம் ஓஜாவும் பிறரும் நான்கு இடங்களில் உப்புப் படிவத்தைக் கண்டுபிடித்தனர். அதில் ஹைட்ரஜன் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தண்ணீர் இருப்பதை உறுதி செய்தனர் நாசா விஞ்ஞானிகள். மேலும் அந்த கருமை நிற கோடு மறையும்போது இந்த உப்புப் படிவங்களும் மறைவதையும் நாசா கண்டுபிடித்தது.

English summary
Dark, narrow streaks on Martian slopes are inferred to be formed by seasonal flow of water on contemporary Mars. The streaks are roughly the length of a football field. These were the focal point of the NASA investigations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X