ஷாக்! தாடி வைக்கவில்லை என்றால் வேலை காலி! விதிகளை மீறினால் தலை காலி! ஆப்கான் தாலிபான்கள் உத்தரவு..!
காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண்கள் குறிப்பாக மாணவர்கள் மேற்கத்திய பாணியில் முடிவெட்டக் கூடாது எனவும், தாடி வைக்காத ஆண்கள் அரசு வேலையில் நீடிக்க அனுமதிக்க முடியாது என அந்நாட்டை ஆளும் தாலிபான்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆப்கான் தாலிபான்களில் எதேச்சதிகாரம் காரணமாக பல்வேறு உலக நாடுகள் அந்நாட்டு தூதரக உறவையும் உதவிகளையும் நிறுத்திவிட்டன.
பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானை தனிமைப்படுத்தியுள்ள நிலையில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பல நாடுகளும் , நிதி அமைப்புகளும் ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விட்டன.

ஆப்கான் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் கடந்த சில வருடங்களாக வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா பெருந்தொற்று, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள் என பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது எனவும், அந்நாட்டில் சுமார் 2.4 கோடி மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 97 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தும் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புக நினைத்தாலும் தாலிபான்கள் உயிர்பறிப்பையே தண்டனையாக வழங்குவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண்கள் குறிப்பாக மாணவர்கள் மேற்கத்திய பாணியில் முடிவெட்டக் கூடாது எனவும், தாடி வைக்காத ஆண்கள் அரசு வேலையில் நீடிக்க அனுமதிக்க முடியாது என அந்நாட்டை ஆளும் தாலிபான்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். மாணவிகள் வகுப்பறையில் பர்தா அணிய வேண்டும் என்றும், ஆண் அரசு ஊழியர்கள் முழு தாடியுடன் வேலை செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் வேலை இழப்பார்கள் என தலிபானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் துணைத் தடுப்புக்கான அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இஸ்லாம் சட்டம்
அமைச்சகங்களின் ஊழியர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால், பயங்கரவாதக் குழு ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பெண்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இது தவிர, திருமணங்களில் இசை நிகழ்ச்சியை தடைசெய்ததோடு, ஆண்கள் மற்றும் பெண்களை வெவ்வேறு அரங்குகளில் பங்கேற்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தலைகள் துண்டிப்பு
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள துணிக்கடைகளில் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் தலைகளை துண்டிக்க தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் ஊடகத்தை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷரியா சட்டத்தை மீறுவதாக கூறி, துணிக்கடைகளில் பயன்படுத்தப்படும் மேனிக்வின்களை தலிபான்கள் ஒடுக்கினர். இதுபோன்ற சம்பவங்களின் அறிகுறிகள் காபூல் தெருக்களில் மீண்டும் தோன்றத் தொடங்கியுள்ளன. தலிபானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் துணைக்கு எதிரான தடுப்பு அமைச்சகம் "மத வழிகாட்டுதல்களை" ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்கள் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்களைக் காட்டுவதை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications