
"தலை"யை உடனே வெட்டுங்க.. தாலிபன்கள் போட்ட பகீர் உத்தரவு.. ரப்பர் பொம்மைகளை கூட விட்டு வைக்கவில்லை
காபூல்: நாளுக்கு நாள் தாலிபான்களின் அட்டகாசம் பெருகி கொண்டே போகிறது.. இத்தனை நாளும் பெண்கள், குழந்தைகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட வந்த நிலையில், இப்போது ஜவுளிகடை பொம்மையை கூட விட்டு வைக்காத கொடுமை நடந்துள்ளது.
20 வருடங்கள் கழித்து போராடி, ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தாலிபான்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பகீர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்..
பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் அதிகமாக எதுவும் தரப்படவில்லை... ஆடைக்கட்டுப்பாடு உள்ளது..
மோடி பயணம் தொடர்பான உளவுத்துறை தகவல்களை பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை- உள்துறை அமைச்சகம் கண்டனம்

பெண் குழந்தைகள்
பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது.. பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடமும் திறக்கப்படவில்லை.. பல்கலைக்கழகங்களில் பெண்கள் பணியாற்றவும் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டனர்.. தலிபான்கள் ஆட்சியில் இல்லாமல் அமெரிக்க நேட்டோ படைகளின் பாதுகாப்பில் நடந்த 2000 முதல் 2020ம் ஆண்டுவரை பள்ளிகளிலும், உயர்கல்விக் கூடங்களிலும் படித்துப் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் ஏற்கனவே தலிபான்கள் தெரிவித்து விட்டனர்.

துணி கடைகள்
இதையெல்லாம் பார்த்து ஆப்கன் மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.. வேறு வழியில்லாமல் இந்த சட்டதிட்டங்களை ஏற்கும் நிலைமைக்கு ஆளாகி உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு உத்தரவையும் பிறப்பித்துவிட்டனர் தாலிபன்கள்.. அதன்படி, ஆப்கானிஸ்தானில் ஜவுளி கடைகளில் வைக்கப்படும் பெண் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாதாம்.. அதாவது கடை வாசலில் ஆளுரயத்தில் பொம்மைகளை வைத்து, அதற்கு புதிய புதிய ஆடைகளை அணிய வைத்திருப்பார்கள்..

பொம்மைகள்
இந்த பொம்மைகளின் அந்த தலைகளை எல்லாம் வெட்டிவிட வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளனர்.. காரணம், இப்படி தலையுடன் கூடிய பொம்மைகள் வைப்பது இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிரானதாம்.. இந்த உத்தரவை ஏற்று பொம்மைகளின் தலைகளை கடைக்காரர்கள் வெட்டி எடுத்து வருகின்றனர். அதன்படி, ஹெராட் நகரில் இயங்கி வரும் ஒரு ஜவுளி கடையில், ஏகப்பட்ட பொம்மைகளை ஒன்றாக படுக்க வைத்து, அவைகளின் தலைகளை வெட்டி எடுத்துள்ளனர்..

வீடியோ
பொம்மைகளை ஒரே மாதிரியாக படுக்க வைத்து, மிகப்பெரிய ரம்பம் எடுத்து அந்த ரப்பர் தலைகளை அறுக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.. ஏற்கனவே இங்கு பாட்டு பாட தடை விதிக்கப்பட்டது.. டான்ஸ் ஆட தடை விதிக்கப்பட்டது.. ஆண் துணையின்றி வீட்டு பெண்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.. மது விற்பனையும் தடை செய்யப்பட்டுவிட்டது.. இப்போது ரப்பர் பொம்மைகளையும் விட்டு வைக்கவில்லை.. ஏற்கனவே வறுமை, பட்டினி, பசியால் கலங்கி நிற்கும் ஆப்கன் மக்கள், இதெல்லாம் பார்த்து மேலும் நொந்து போயுள்ளனர்..!