For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிக்டாக் மோகம்.. 160 அடி உயரத்தில் இருந்து விழுந்து டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு.. பகீர் வீடியோ

Google Oneindia Tamil News

பீஜிங்: 160 அடி உயரத்தில் இருந்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் கீழே விழுந்து உயிரிழந்தார்.
சீன செயலியான டிக்டாக்குக்கு இந்தியாவில் அதிரடியாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை தடை செய்வதற்கு முன்பாக நாட்டில் பல பேர் ஆபாச படங்கள், நடனங்களை வெளியிட்டு சிறுவர்களை தவறான பாதைக்கு வழிநடத்தி சென்றனர்.

ஒரு சிலர் டிக்டாக் மோகத்தால் ரயில் முன்பு, நீர்நிலைகளில் ஆபத்தான முறையில் டிக்டாக் செய்து பரிதாபமாக இறந்தும் போனார்கள். இப்படிப்பட்ட ஒரு டிக்டாக் மோகம், டிக்டாக் ஸ்டார் ஒருவரின் உயிரையே பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

 டிக்டாக் பிரபலம்

டிக்டாக் பிரபலம்

சீனாவை சேர்ந்தவர் 23 வயதான சியாவோ கியூமி. இவர் நம்ம ஊரு ஜி.பி. முத்து, ரவுடி பேபி சூர்யா வரிசையில் டிக்டாக் பிரபலமாவார். கிரேன் ஆபரேட்டரான சியாவோ கியூமி இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆவார். தனது தொழில் குறித்து டிக்டாக் செய்து வீடியோ வெளியிடுவதை சியாவோ கியூமி வாடிக்கையாக வைத்திருந்தார். டிக்டாக்கில் இவரது நடன அசைவுகள் மிகவும் பிரபலமாகும்.

 160 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்

160 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்

டிக்டாக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ்களை வைத்திருந்த சியாவோ கியூமியின் உயிருக்கு டிக்டாக்கே வினையாக வந்து சேர்ந்தது. அதாவது 160 அடி உயரத்தில் கிரேன் கேபினில் இருந்தபடி டிக்டாக்கில் லைவ் வீடியோவை எடுத்துக் கொண்டிருந்த சியாவோ கியூமி எதிர்பாராதவிதமாக 160 அடி உயரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

லைவ் வீடியோ

லைவ் வீடியோ

சியாவோ கியூமி டிக்டாக் செய்வது போலவும், அதன்பிறகு அவர் 160 அடி உயரத்தில் இருந்து கீழே விழுவது போலவும் லைவ் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. 160 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தபோது கூட செல்போன் கையில் இருந்து கீழே விழவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சியாவோ கியூமி கால் தவறி விழுந்ததாகவும், டிக்டாக் மோகத்தால் அவர் கீழே விழவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மற்றவர்களுக்கு பாடம்

மற்றவர்களுக்கு பாடம்

சியாவோ கியூமியின் மரணத்தால் அவரது பாலோயர்ஸ்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சியாவோ கியூமிவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பாலோயர்ஸ்கள் இருக்கிறது எனக்கூறுவதில் என்ன பெருமை. டிக்டாக் மோகம் கடைசியில் பெண் ஒருவரின் உயிரையே பறித்து விட்டதுதான் மிச்சம். ஆனாலும் சியாவோ கியூமியின் மரணம் டிக்டாக் உள்பட பல்வேறு சமூக வலைத்தலங்களில் அடிமையாக இருப்பவர்களுக்கு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
The woman who posted the dictation video fell from a height of 160 feet and died The woman who posted the dictation video fell from a height of 160 feet and died. There is no doubt that the death of Xiao Qiumei will be a lesson to those who are addicted to various social networking sites including Tiktok
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X