வீடு புகுந்து பெண் அருகே படுத்த பலே திருடன்.. 'நாத்தத்தை' வைத்து நாய் மூலம் பிடித்தார்கள்!
துபாய்: ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்குள் திருடன் ஒருவன் புகுந்து விட்டான். வீடு புகுந்த அவன் பெட்ரூமுக்குள் நுழைந்தான். அங்கு கணவனும், மனைவியும் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். நைஸாக அந்தப் பெண்ணுக்கும், கணவனுக்கும் நடுவே புகுந்து பெண் அருகே படுத்துக் கொண்டு சில்மிஷம் செய்தான். ஆனால் அவனது உடலிலிருந்து வந்த மோசமான வாசத்தை வைத்து அப்பெண் அது கணவர் இல்லை என்று உணர்ந்து கத்தி கூச்சல் போட்டார். இதையடுத்து திருடன் தப்பி ஓடி விட்டான்.
இருப்பினும் போலீஸார் மோப்ப நாய் மூலம் அந்த நபரின் நாற்றத்தை வைத்து அவன் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து கைதும் செய்து விட்டனர்.
கிட்டத்தட்ட பஞ்ச தந்திரம் படக் கதை போலத்தான் இருக்கிறது துபாயில் நடந்த இந்த கூத்துச் சம்பவம்.

வீடு புகுந்த திருடன்
துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் ஒரு திருடன் புகுந்தான். அங்கிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தான்.

கிடைத்ததை சுருட்டியாச்சு...
வீட்டுக்குள் நுழைந்த அவன் கையில் கிடைத்த பொருட்களை சுருட்டிக் கொண்டான். பிறகு அங்கிருந்த படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

'கேப்' விட்டுத் தூங்கிய கணவன் மனைவி..
அங்கு கணவன், மனைவி நல்ல தூக்கத்தில் இருந்துள்ளனர். இருவருக்கும் நடுவே நிறைய 'கேப்' இருந்துள்ளது. நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.

'பில் இன் தி பிளாங்க்ஸ்...'
அந்தப் பெண் படுத்திருந்த கோலத்தைப் பார்த்ததும் திருடனுக்கு மூடு மாறி விட்டது. உடனே படுக்கையை நெருங்கினான். கையில் சுருட்டி பொருட்களை அப்படியே மெதுவாக கீழே வைத்து விட்டு அந்தப் பெண்ணுக்கு அருகே போய் படுத்தான்.

விரல்களால் சில்மிஷம்
பின்னர் மெதுவாக அந்தப் பெண்ணைத் தொட்டுள்ளான். தடவிக் கொடுத்துள்ளான். அந்தப் பெண் மெதுவாக நெளிந்தார். கணவர்தான் தொடுகிறார் என்று முதலில் நினைத்துள்ளார் அப்பெண்.

குளிக்காம வந்துட்டியே.. குமரேசா....!
ஆனால் சற்று விழிப்பு தட்டிய அவருக்கு ஏதோ ஒருவிதமான பேட் ஸ்மெல் வருவதை உணர்ந்தார். மெதுவாக திரும்பிப் பார்த்தார். அதன் பிறகுதான் தன் அருகே படுத்திருந்தது கணவர் இல்லை என்று சொரணை வந்தது அவருக்கு. சட்டென்று எழுந்து பார்த்த அவர் அருகில் கணவருக்குப் பதில் வேறு ஒரு நபர் படுத்திருந்ததை பார்த்து கத்திக் கூச்சல் போட்டார். உடனே திருடன் எழுந்து அதி வேகமாக ஓடி விட்டான்.

போலீஸில் புகார்
அதன் பின்னர் போலீஸாருக்குப் போன் போட்டு புகார் கொடுத்தனர் கணவனும், மனைவியும். போலீஸார் விரைந்து வந்தனர். கூடவே மோப்ப நாயையும் கூட்டி வந்தனர்.

கரெக்டா கண்டுபுடிச்சுட்டியே ஜூலி... !
நாயும் திருடனின் வாசத்தை நன்கு நுகர்ந்து பார்த்தது. பின்னர் அருகில் இருந்த கட்டடத்துக்கு அது ஓடியது. அங்குதான் அந்த திருடன் தங்கியிருந்தான். இதையடுத்து போலீஸார் அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போலீஸ் அதிகாரி மாரி!
இதுகுறித்து போலீஸ் அதிகாரியான அல் மாரி என்பவர் கூறுகையில், திருடனை மோப்ப நாய் மூலம் எளிதாக கண்டுபிடித்து விட்டோம். அவனது உடல் துர்நாற்றமே அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது என்றார்.
நீதி: திருடப் போகும் முன்பு நல்லா சோப்புப் போட்டு குளிச்சுட்டுப் போங்கப்பா திருடர்களே... இல்லாட்டி நாய் பிடிச்சுரும்..!
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications