அட மக்கு திருடர்களா.. பையில 4 மலைப்பாம்பு இருக்கறது தெரியாம திருடிட்டு போய்ட்டீங்களே!
அமெரிக்காவில் மலைப்பாம்புகள் இருந்த பையை திருடர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், திருடர்கள் சிலர் மலைப்பாம்பு வைக்கப்பட்டிருந்த பையை திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் பகுதியை சேர்ந்தவர் பிரைன் கண்டி. பாம்புகள் ஆர்வலரான இவர், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பாம்புகள் குறித்து விழிப்புணர்வு வகுப்பு எடுத்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை காலை சான் ஜோஸ் பகுதியில் உள்ள ஒரு நூலகத்தில் பாம்புகள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார் கண்டி. அப்போது தான் வளர்த்து வரும் பாம்புகளில் இருந்து 4 மலைப்பாம்புகள் மற்றும் ஒரு பெரிய சைஸ் பல்லியை ஒரு பையில் போட்டு கூடவே எடுத்து சென்றிருந்தார்.
வகுப்பு முடித்து கண்டி தனது காரில் புறப்படும் போது, அங்கிருந்த சில நபர்கள், அவரது பையை பறித்து சென்றுவிட்டனர். திருடர்களை பிடிக்க கண்டி முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து இணைய தளம் மூலம் பிரைன் கண்டி அமெரிக்க போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பையில் இருந்த நான்கு மலைப்பாம்புகள் மற்றும் பல்லியின் தன்மைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த மலைப்பாம்புகள் விஷத்தன்மையற்றவை என்பதால், அவைகளை துன்புறுத்த வேண்டாம் என கண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
கிண்டியில் பையில் இருப்பது மலைப் பாம்புகள் என தெரிந்தே திருடர்கள் திருடினார்களா? அல்லது பணம் இருக்கும் என நினைத்து திருடினார்களா என்பது தெரியவில்லை. ஒருவேளை பாம்பு இருப்பது தெரியாமல் அந்த பையை திறந்தால்..! அய்யோ.. அம்மா... அந்த நபர்களின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.. இது தான் திருடனுக்கு தேள் கொட்டிய கதையோ என்னவோ..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications