For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆ அச்சு.. ஆ அச்சு.. இப்படியே ஒரு நாளைக்கு 20,000 வாட்டி தும்முது பாஸ் இந்தப் பொண்ணு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சளி பிடித்து ஒரு நாளைக்கு பத்து இருபது தடவை அடுத்தடுத்து தும்மல் வந்தாலே தாங்க முடியாது. ஆனால், அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவர் நாள்தோறும் 20 ஆயிரம் முறை தும்மல் போடுகிறாராம்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கேட்டலின் தோர்ன்லே (12). சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கு திடீரென தும்மல் போடும் பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு நிமிடத்திற்கு 20 முறை என ஒரு நாளைக்கு குறைந்தது 20,000 முறை என இந்த சிறுமி தும்மிக் கொண்டுள்ளார்.

மருத்துவர்கள் குழப்பம்....

மருத்துவர்களுக்கே கேட்டலினின் இந்தப் பிரச்சினை சவாலாக இருக்கிறது. ஏன் இவ்வாறு கேட்டலின் தொடர்ச்சியாக தும்மல் போட்டு வருகிறார் என அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

நிம்மதியில்லா வாழ்க்கை...

நிம்மதியில்லா வாழ்க்கை...

தும்மல் பிரச்சினை தொடங்கியது முதல் தினமும் சாப்பிட முடியாமல், நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் கேட்டலின். பள்ளிக்கும் போக முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.

வயிற்று வலி...

வயிற்று வலி...

தொடர்ந்து தும்மல் போடுவதால் கேட்டலினுக்கு அடிவயிற்றில் கடும் வலியும் ஏற்படுகிறது. தொடர்ந்து தும்முவதால் அடி வயிறு எப்போதும் வலித்தபடியே இருக்குமாம். காலும் பலமில்லாதது போல் உணர்கிறாராம்.

ஆறுதலான விஷயம்...

ஆறுதலான விஷயம்...

ஆனால், கேட்டலினிற்கு ஆறுதல் தரும் விஷயமும் ஒன்று இருக்கிறது. அதாவது ‘பீட்டில்ஸ்' இசைக் குழுவின் இன்னிசை மட்டுமே தனக்கு தும்மல் வராமல் தடுப்பதாக நம்புகின்றாள் கேட்டலின்.

அலர்ஜி காரணமில்லை...

அலர்ஜி காரணமில்லை...

இவருக்கு அலர்ஜி அல்லது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் டாக்டர்கள் நினைத்தனர். ஆனால் அது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று இப்போது கருதுகிறார்கள்.

கனவில் கூட...

கனவில் கூட...

தனது நிலை குறித்து இச்சிறுமி கூறுகையில், "சில நேரங்களில் எனது உடலை விட்டு நான் கொஞ்சம் வெளியில் போய் விடலாமா என்று கூட நினைப்பேன். தூங்கினால் கனவில் கூட தும்மல் வருவது போல தோன்றுகிறது" என்கிறார் வேதனையுடன்.

English summary
This is Katelyn Thornley. She sneezes around 20 times a minute – up to 20,000 times every day. She’s in constant pain because her abdomen is constantly clenching, she can barely sleep or eat and she can’t attend school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X