For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது எங்கள் நாடு… அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திறங்கிய போது சவுண்டு விட்ட சீனா அதிகாரி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் ஒபாமா ஜி20 மாநாட்டில் பங்கேற்ற சீனா சென்ற போது, இது எங்கள் நாடு என்று சீன அதிகாரி ஒருவர் கத்தியதால் அங்கு பெரும் சலசலப்பு உருவானது.

சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சீனா நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

'This is our country!' says Chinese official as Obama lands

அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் அவருடன் அந்நாட்டு பத்திரிகையாளர்களும் செல்வது வழக்கம். அந்த வகையில், அமெரிக்க பத்திரிகையாளர்கள் சீனாவிற்கு வந்துள்ளனர். அதிபர் ஒபாமா விமான நிலையத்தில் வந்திறங்கிய உடன் அமெரிக்க பத்திரியாளர்கள் ஒபாமாவிடம் செல்ல முயன்றனர். அப்போது, சீன பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை ஏற்காமல் அமெரிக்க செய்தியாளர்கள் சீன அதிகாரிகளுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதும் சீன அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து வெள்ளை மாளிகையின் பெண் அதிகாரி ஒருவர், சீன பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று, வந்திருப்பது அமெரிக்க விமானம் என்றும் வந்திருப்பவர் அமெரிக்க அதிபர் என்றும் கூறியுள்ளார். அதற்கு சீனா, எங்கள் நாடு, இது எங்கள் விமான நிலையம் என்று அந்த பாதுகாப்பு அதிகாரி கடுமையாக பேசி உள்ளார்.

அதே போல, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் சுசன் ரைஸ் மற்றும் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி பென் ரோடஸ் ஆகியோரும் அதிபர் ஒபாமாவை நெருங்க முயன்ற போதும் சீன அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

English summary
When US President Barack Obama arrived in China Saturday for his final trip to Asia as commander in chief, the ceremonial niceties were marred by an undiplomatic shouting incident on the tarmac.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X