முதுகுத்தண்டே சிலிர்த்து போச்சு! நரகத்தின் கிணற்றில் இறங்கிய ஆய்வாளர்கள்! உள்ளே பார்த்தால் ஆச்சர்யம்
சனா: உலகில் மனிதர்களால் விளக்கிக்கொள்ள முடியாததாக பல விஷயங்கள் உள்ளன. ஏமென் நாட்டில் உள்ள நரகத்தின் கிணறு என்று அழைக்கப்படும் மிகப்பெரிய கிணறும் விளக்கிக்கொள்ள முடியாததாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனுள் இருக்கும் அதிசயங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Recommended Video
இந்த பூமிக்கு ஏறத்தாழ 4.543 பில்லியன் வயதாகிறது. அதாவது இத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பூமி உருவாகியுள்ளது. மனிதனையும் சேர்த்து தற்போது இருக்கும் உயிரினங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த பூமி உருவானபோது இருந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் 25 சதவிகிதம் கூட தற்போது உயிருடன் இல்லை.

பேரழிவுகள்
அந்த அளவிற்கு இந்த பூமி பேரழிவுகளை சந்தித்துள்ளது. எரிமலை வெடிப்பு, விண்கற்கள் மோதல், கடல்மட்டம் அதிகரிப்பு என பல பேரழிவுகள் ஏற்கெனவே இருந்த பல உயிரினங்களை முற்றிலுமாக அழித்துவிட்டது.அந்த வகையில் நிலத்தடியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக ஏமன் நாட்டில் ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இது அந்த ஊர் மக்களால் பேய்களின் கிணறு அல்லது நரகத்தின் கிணறு என்று அழைக்கப்படுகிறது.

ஏமன்
ஏமனின் அல்-மஹாராவில் அமைந்துள்ள இந்த கிணறு மேற்பரப்பில் சுமார் 30 மீ (100 அடி) அகலம் கொண்ட ஒரு வட்ட நுழைவாயிலைக் கொண்டுள்ளது, மேலும் இது 113 மீட்டர் (367 அடி) ஆழம் வரை நீண்டுள்ளது. இந்த கிணற்றில் பேய்கள் உறங்குவதாகவும், இரவு நேரங்களில் அமானுஷ்ய சத்தம் கேட்பதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது இதில் அழுகிய பிணத்தின் வாடை வீசுவதாகவும் கூறுகின்றனர். இதனையடுத்து இந்த கிணறு உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

குகைகள்
இதன் தொடர்ச்சியாக ஓமானி குகைகள் ஆய்வுக் குழு (OCET) இந்த கிணற்றை ஆய்வு செய்ய தொடங்கியது. கயிறுகளை கட்டி 10 ஆய்வாளர்கள் உள்ளே இறங்கியபோது அவர்களின் முதுகுத்தண்டு சிலிர்த்து போயுள்ளது. ஏனெனில் அந்த கிணற்றுக்குள் பல பாம்புகள், தவளைகள், வண்டுகள் மற்றும் இறந்து போன பெரிய உயிரினங்களின் உடல்களும் இருந்துள்ளன. இந்த உயிரினங்கள் வழிதவறி இந்த பாதையில் வந்திருக்கலாம்.

என்ன இருந்தது
மேலும் அவர்கள் ஆய்வு செய்தபோது அங்கு நீர்வீழ்ச்சி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியது எதுவெனில் அது குகை முத்துக்கள்தான். ஒரு கிணற்றுக்குள் நீர்வீழ்ச்சியும் குகை முத்துக்களும் இருப்பது மிக அரிதானது. இந்த கிணறு சுமார் 10 லட்சம் வருடங்களுக்கு முன்னர் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதை ஆராய முக்கிய காரணமான OCET குழுவின் உறுப்பினரும், ஓமனின் ஜெர்மன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான முகமது அல்-கிண்டி இதை பற்றி பேட்டி அளித்துள்ளார் .

பேட்டி
அதில், "இந்த ஆய்வு ஏமன் நாட்டின் அதிசயத்தையும் வரலாற்றையும் வெளியே கொண்டு வரும்." என்று கூறியுள்ளார். எது எப்படியோ மனிதனுக்கு இயற்கை குறித்த புரிதல் இல்லாத காலகட்டங்களில் இயற்கையை புனிதமாகவும், அமானுஷ்யமாகவும் கற்பனை செய்து கொண்டோம். தற்போது மனித நாகரிகம் வளர வளர அத்துடன் ஆய்வு மனப்பான்மையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications